Expert

கர்ப்ப காலத்தில் சர்க்கரையைத் தவிர்த்தால் உங்களுக்கு மட்டுமல்ல! உங்க குழந்தைகளுக்கும் நல்லது

  • SHARE
  • FOLLOW
கர்ப்ப காலத்தில் சர்க்கரையைத் தவிர்த்தால் உங்களுக்கு மட்டுமல்ல! உங்க குழந்தைகளுக்கும் நல்லது


இவை இன்சுலின் எதிர்ப்பு போன்ற வளர்சிதை மாற்ற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதாவது உடலில் செல்கள் இன்சுலின் ஹார்மோனுக்கு சாதாரணமாக பதிலளிக்காதபோது இந்நிலை ஏற்படலாம். அதிகளவு சர்க்கரை உட்கொள்ளல் மன ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கலாம். அதே சமயம், கர்ப்ப காலத்தில் அல்லது அதற்கு முன்னதாக சர்க்கரை உட்கொள்வதை நிறுத்துவதால் உடலில் சில நேர்மறையான மாற்றங்களைப் பெறலாம். இதில் கர்ப்பிணிகள் சர்க்கரை உட்கொள்வதை நிறுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டெல்லியில் உள்ள ஹோலி குடும்ப மருத்துவமனையின் டயட்டீஷியன் சனா கில்லி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Diet: மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் இதையெல்லாம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் சர்க்கரையைத் தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கர்ப்பிணி பெண்கள் சர்க்கரை உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் தாய் மற்றும் சேய் இருவரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

  • பெண்கள் கர்ப்ப காலத்தில் சர்க்கரை உட்கொள்வதைத் தவிர்ப்பது, கர்ப்ப கால நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. இந்த கர்ப்ப கால நீரிழிவு நோயால் பெண்கள் பிரசவத்தின் போது சில உடல்நல பிரச்சனைகளைச் சந்திப்பர். இதைத் தவிர்க்க சர்க்கரை உட்கொள்வதைக் கைவிட வேண்டும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சாதாரணமாக வைக்கவும் உதவும்.
  • சர்க்கரை உட்கொள்வதை நிறுத்துவதன் மூலம் உடல் ஆற்றல் அதிகரித்து சோர்வு நீங்கும். மேலும் இதன் மூலம் கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
  • கர்ப்பிணி பெண்கள் சர்க்கரையைக் கைவிடுவதன் மூலம் உடல் பருமனடைவதைத் தடுக்கலாம். கர்ப்ப காலத்தில் பருமனாக இருந்தால், தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
  • சர்க்கரை உட்கொள்வதை நிறுத்துவதால், குழந்தையை உடல் பருமனில் இருந்து பாதுகாக்க முடியும். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக சாப்பிடுவது குழந்தைக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தினாலும், சில குழந்தைகள் மரபணு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களின் உடல் எடையை அதிகமாக்குகிறது. எனவே, குழந்தையை உடல் பருமன் மற்றும் அதிக எடையில் இருந்து பாதுகாக்க, சர்க்கரையை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது
  • கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரித்தால், அது சாதாரண பிரசவத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். இதற்கு சர்க்கரையை கைவிடுவது மிகவும் நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Juice for Pregnancy: கர்ப்ப காலத்தில் தினமும் ஃப்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லதா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

கர்ப்ப காலத்தில் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் அல்லது சாதாரண நபர்கள் யாராக இருப்பினும், சர்க்கரையை திடீரென கைவிடுவது கடினமான ஒன்றாக அமைகிறது. இதற்கு சர்க்கரையின் அளவை படிப்படியாக குறைப்பது நல்லது. இதற்கு முதலில் நீங்கள் கைவிட வேண்டியது டீ, காபி போன்றவற்றையே ஆகும். பிறகு படிப்படியாக இனிப்புகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதில் கர்ப்பிணி பெண்கள் சர்க்கரையைக் கைவிட உதவும் சில எளிய முறைகளைக் காணலாம்.

  • பொதுவாக பழங்களில் இயற்கையான இனிப்பு சுவை உள்ளது. எனவே சர்க்கரை சாப்பிட விரும்புபவர்கள் புதிய பழங்களை சாப்பிடலாம்.
  • கர்ப்ப காலத்தில் இனிப்பு சாப்பிட விரும்புபவர்கள் சந்தையில் கிடைக்கும் இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாற்றாக, உலர் பழங்களை நெய்யில் வறுத்து லட்டு செய்து சாப்பிடலாம். இதில் சர்க்கரைக்குப் பதிலாக பேரீச்சம்பழம், திராட்சை மற்றும் அத்திப்பழங்களைப் பயன்படுத்தலாம்.
  • சர்க்கரை சேர்க்காமல் டீ குடிக்க பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், சாதாரண தேநீருக்குப் பதிலாக தேங்காய் நீர், எலுமிச்சை நீர் மற்றும் மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம்.
  • சர்க்கரைக்குப் பதில் இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் இன்னும் பிற மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம். இவை இயற்கையான இனிப்பைத் தருகிறது.
  • காலை உணவாக புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவைத் தேர்ந்தெடுக்கலாம். இவை வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது.
  • கர்ப்பிணி பெண்கள் பேக் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு சர்க்கரை நிறைந்திருக்கும்.

கர்ப்ப காலத்தில் உணவில் சர்க்கரையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த வழிகளைப் பின்பற்றலாம். எனினும், உணவில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கு முன் உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரை அணுகி பயன்பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Exercise Benefits: கர்ப்ப காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செஞ்சா எவ்வளவு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

கருத்தரிக்க திட்டமிட்டிருந்தால் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

Disclaimer