What Foods To Eat For Diabetes During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் பல்வேறு ஆரோக்கிய மாற்றங்கள் நிகழும். இது கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தைகள் இருவரையும் பாதிக்கலாம். இதில் குறிப்பாக, கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். இதனால், கர்ப்ப கால நீரிழிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் குழந்தையையும் பாதிக்கும். இந்த சூழ்நிலையில் கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். கர்ப்பிணி பெண்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ள உணவுப் பொருள்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லாவ்னீத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Orange During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் இது தெரிஞ்சா இனி தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவீங்க
கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள்
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
புரத உணவுகள்
கர்ப்பிணி பெண்கள் புரத உணவுகளை உட்கொள்வதன் மூலம் தசைகள் வலுவடைவது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. அதன் படி, பருப்பு, பன்னீர், தாகி போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
மக்னீசியம் நிறைந்த உணவுகள்
மக்னீசியம் நம் உடலுக்குத் தேவையான கனிமங்களில் ஒன்றாகும். இது தசை மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இந்த உணவுகள் ஆற்றலைப் பராமரிக்கவும், சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. பாதாம், கீரை, அவகேடோ போன்ற மக்னீசியம் நிறைந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் நன்மை பயக்கும்.
நார்ச்சத்து மிகுந்த உணவுகள்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த நார்ச்சத்து நிறைந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், உடலில் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். பருப்பு, முழு தானியங்கள், வழைப்பழம், ஆப்பிள், பச்சைக் காய்கறிகள், பேரிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Fennel Water During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் சீரகத் தண்ணீர் குடிக்கலாமா? மருத்துவர் தரும் விளக்கம்
முழு தானிய ரொட்டி
இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த, உணவில் சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது கோதுமை மாவினால் செய்யப்பட்ட ரொட்டிக்கு பதிலாக முழு தானிய மாவு பயன்படுத்தி செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடலாம்.
பசியைக் கட்டுப்படுத்துதல்
உணவு பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கலாம். இதற்கு நாள் முழுவதும் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளின் அளவை பிரிக்க வேண்டும். உணவில் ஆரோக்கியமான சத்தான உணவுகளை காலை உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கிரேக்க தயிர் எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் பசியைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது போன்றவை சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், குழந்தையின் வளர்ச்சிக்கும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் ஆரோக்கியமான உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Health Drinks: கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் அருந்த வேண்டிய பானங்கள் இது தான்.!
Image Source: Freepik