Vitamin a Rich Fruits During Pregnancy: கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்களது உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறிய அளவிலான தாக்கமும் தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே வயிற்றில் இருக்கும் குழந்தையின் நல்ல ஆரோக்கியத்திற்கும் மற்றும் வளர்ச்சிக்கும் உதவக்கூடிய உணவையே கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும். அதன் படி, கர்ப்ப காலத்தில் புரதங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது நல்லது. இது குழந்தைகளை நன்றாக ஆரோக்கியமாக வளர வைக்க உதவுகிறது.
மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதன் படி கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் ஏ சத்துக்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வயிற்றில் உள்ள குழந்தையின் அனைத்து உறுப்புகள் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ அவசியமானதாகக் கருதப்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இதில் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய பழங்கள் குறித்து டெல்லியில் உள்ள ஹோலி குடும்ப மருத்துவமனையின் உணவியல் நிபுணர் சனா கில் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இதில் தெளிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric during Pregnancy: கர்ப்ப காலத்தில் மஞ்சளை உட்கொள்வது குழந்தைக்கு ஆபத்தா? உண்மை இங்கே!
கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள்
மருத்துவரின் கூற்றுப்படி, “கர்ப்ப காலத்தில் பெண்கள் வைட்டமின் ஏ குறைபாட்டைத் தவிர்க்க இதில் கொடுக்கப்பட்டுள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.
ஆரஞ்சு
கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஏ, சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது மலச்சிக்கல்லை நீக்குகிறது. கூடுதலாக, ஒவ்வாமை பிரச்சனைகளை நீக்குவதுடன், வாய்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தருகிறது.
திராட்சைப்பழம்
கர்ப்ப காலத்தில் திராட்சைப்பழம் உட்கொள்ளுதல் மிகவும் நல்லது. இது வைட்டமின் ஏ சத்துக்களைத் தவிர கால்சியம், நார்ச்சத்துக்கள், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே, கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய பழங்களில் திராட்சைப்பழம் சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. மேலும் இது சாப்பிடுவதற்கு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. திராட்சை உட்கொள்வதன் மூலம் வயிற்றிலிருக்கும் குழந்தைகளுக்குப் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
கினோ
கினோ பழம் ஆரஞ்சு பழத்தைப் போன்று தோற்றமளிக்கும். இதில் அதிகளவு வைட்டமின் ஏ சத்துக்கள் காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் கினோ பழத்தை உட்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்க உதவுகிறது. மேலும் இந்தப் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல்லைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கினோ பழத்தை உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Vomiting During Pregnancy: கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல் ஏற்பட காரணம் என்ன?
ஆப்ரிகாட்
ஆப்ரிகாட் பழத்தில் ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனைக் கர்ப்ப காலத்தில் உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களை உட்கொள்வது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனையை நீக்குகிறது.
கொய்யாப்பழம்
கர்ப்ப காலத்தில் கொய்யாப்பழம் உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். இவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முதுமை செயல்முறையைக் குறைக்கவும் உதவுகிறது. இந்தப் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கர்ப்ப கால சர்க்கரை நோய் பிரச்சனையைத் தவிர்க்க பெரிதும் உதவுகிறது. கூடுதலாக, கர்ப்பிணி பெண்கள் கொய்யாப்பழம் உட்கொள்வது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த பழங்கள் அனைத்தும் வைட்டமின் ஏ நிறைந்த சிறந்த பழங்களாகும். கர்ப்பிணி பெண்கள் இந்த வகை பழங்களை உட்கொள்வது உடலில் வைட்டமின் ஏ குறைபாடு பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Gestational Diabetes Prevention: கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயா? இதை செய்யுங்க போதும்
Image Source: Freepik