How To Get Intelligent Baby: அறிவார்ந்த குழந்தை பிறக்க வேண்டும் என்பது இன்று பல பெற்றோர்களின் விருப்பமாகும். பிறக்கும் குழந்தையை புத்திசாலியாக மாற்ற, இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தையை அறிவாளியாக மற்றும் புத்திசாலியாக மாற்றக்கூடிய சில எளிய முறைகளைக் காணலாம்.
குழந்தை புத்திசாலியாக வளர கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை?
பிறக்கும் போது குழந்தைகள் புத்திசாலியாக மற்றும் அறிவாளியாக வளர கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
பெண்கள் கர்ப்ப காலத்தில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தாய்மார்களின் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதுடன், வயிற்றில் உள்ள குழந்தையின் அறிவுத் திறனையும் வளர்க்கும்.
எடைக்கட்டுப்பாடு
பெரும்பாலான தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் அனுபவிக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் ஆகும். இது குழந்தை சாதாரண எடையுடன் பிறக்க வழிவகுக்கிறது. எனவே, பெண்கள் தங்களது எடையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அதாவது கர்ப்ப காலத்தில் தாயின் எடை அதிகரிப்பது, குழந்தையின் எடை குறைய காரணமாக அமைகிறது. மேலும், இது குழந்தையின் மன திறன்களை பாதிப்பதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Avoid Pregnancy Fruits: கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா?
பற்களை கவனமாகக் கையாளுதல்
தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் பற்களைச் சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வாய் மற்றும் பல் நோய், வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. மேலும், இது குழந்தையின் உடல் எடையையும் குறைக்கிறது. குறிப்பாக, கர்ப்ப காலத்தில் வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதில் பெண்கள் கவனம் செலுத்தாத போது, குழந்தைகளுக்குக் கற்பிப்பதில் 2 முதல் 4 மடங்கு சிரமத்தை சந்திப்பர்.
இசை கேட்பது
கர்ப்ப காலத்தில் பெண்கள் இசை கேட்பது, குழந்தையின் ஆரோக்கியத்தில் அற்புதமான விளைவை ஏற்படுத்தக் கூடும். ஆனால், இசை கேட்கும் போது ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்த வேண்டாம். அதே சமயம், குழந்தைகளுக்கு மென்மையான மற்றும் கிளாசிக் வகை இசையின் ஒலிகளைக் கேட்க வைக்கலாம். ஏனெனில், குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு இசை ஒரு ஆக்கப்பூர்வமான விளைவை ஏற்படுத்துவதாக அமைகிறது.
சர்க்கரை உட்கொள்வதைத் தவிர்க்கவும்
கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் குறைந்த அளவிலான சர்க்கரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை கலந்த உணவுகள் பல இருப்பினும், இது ஆரோக்கியமற்ற உணவு வகைகளைச் சேர்ந்ததாகும். எனவே, குழந்தையின் ஆரோக்கியமாகவும், புத்திசாலியாகவும் பிறக்க, கர்ப்ப காலத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Test Kit: கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்துவது எப்படி?
கால்சியம் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்
குழந்தைகளின் ஆரோக்கியமான மூளைக்கு கால்சியம் மற்றொரு அத்தியாவசியமான மூலமாகும். மேலும், கால்சியத்தைத் தவிர, இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து, மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துகளை கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான எண்ணெய் வகைகள்
தாய்மார்கள், கர்ப்ப காலத்தில் கொழுப்பை எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில், இது உடல் பருமன் அடைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஆனால், ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் கருவின் மூளைக்கு நன்மை பயக்கின்றன. இது நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
மன அழுத்தத்தைக் குறைத்தல்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் குழந்தையின் புத்திசாலித்தனத்தை பாதிக்கும் காரணியாக அமைகிறது. எனவே, பெண்கள் கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்க, சில கர்ப்ப கால யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். யோகா செய்வதால் மனதை நிறைவுடன் வைத்திருக்கலாம். இது தாயின் மன அழுத்தத்தால் குழந்தையின் அறிவுத் திறன் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது.
இது போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஆரோக்கியமுடனும், அறிவாலி மற்றும் புத்திசாலி மிக்க குழந்தைகளைத் தாய்மார்கள் பெற்றெடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Premature Birth Symptoms: குறைபிரசவம் ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும்
Image Source: Freepik