கர்ப்பிணி பெண்கள் அனைவரும் எதிர்பார்ப்பது குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் என்பதாகும். இதற்காக கர்ப்ப காலம் முதலே குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஆரோக்கியமான உணவு முறைகளைக் கையாள்வர், மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் எனக் கூறுவர்.
இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலம் முடிவடைதற்குள் குழந்தை முழுமையாக வளர்ச்சி பெற்று ஆரோக்கியமாக பிறக்க வேண்டும். ஆனால், சில நேரங்களில் குழந்தைகள் பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகின்றன.அவற்றில் ஒன்றே குறைப்பிரசவம். குறைபிரசவத்தின் அறிகுறிகள் மற்றும் அதற்கான காரணங்களைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Avoid Pregnancy Fruits: கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா?
குறைபிரசவத்திற்கான அறிகுறிகள்
குறைபிரசவத்திற்கான அறிகுறிகளை, பெண்கள் கர்ப்ப காலங்களில் உணரலாம். அவை,
- அடிக்கடி வயிற்றில் ஏற்படும் சுருக்கங்கள் அதாவது பிரசவ வலியைத் தொடர்ந்து முதுகுவலி.
- அடிவயிறு அல்லது இடுப்பு பகுதியில் லேசான வயிற்றுப்பிடிப்புகள் மற்றும் மன அழுத்தம்
- சில சமயங்களில் கர்ப்பிணி பெண்களின் பிறப்புறுப்பு புள்ளிகள்
- லேசான இரத்தப்போக்கு ஏற்படுதல்
இது தவிர மற்ற அறிகுறிகளாக,
- மூச்சுத்திணறல் ஏற்படுதல்
- தலைப்பகுதி மட்டும் பெரிதாக இருப்பது
- வயிற்றுத் தொப்பை சிறிய அளவில் இருப்பது
- கரு வளர்ச்சி கூர்மையாக இருத்தல்
- சரியான முறையில் உணவு செல்லாதது
- குழந்தை எடை குறைந்து காணப்படுவது
இவையும் குறைபிரசவத்திற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pregnant tips : விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்?
குறைபிரசவத்திற்கான காரணங்கள்
முன் கூட்டியே குழந்தை பிறக்கும் குறைப்பிரசவம் பல்வேறு காரணங்களால் உண்டாகலாம். இவை பெரும்பாலும் இயற்கையாகவே நிகழ்கின்றன. குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நோய்த்தொற்றுகள் போன்ற நாள்பட்ட நிலைமைகள் காரணமாக குறைப்பிரசவம் உண்டாகலாம்.
மேலும், கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாத போது மற்றும் தேவையான பராமரிப்பு இல்லாத போதிலும் குறைபிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
மற்ற காரணங்களாக, கர்ப்பம் தரித்த பெண்களுக்கு சர்க்கரை வியாதி, சிறுநீரக பாதிப்பு, மஞ்சள் காமாலை போன்றவை இருந்தாலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு.
கர்ப்பம் தரித்த பெண்களின் வயதைப் பொறுத்தும் குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களும், 35 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பின் குறைபிரசவம் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Foods: கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடலாமா?
Image Source: Freepik