Expert

Pregnancy Foods:கர்ப்ப காலத்தில் அசைவ உணவு சாப்பிடுவது நல்லதா? இதோ உங்களுக்கான பதில்

  • SHARE
  • FOLLOW
Pregnancy Foods:கர்ப்ப காலத்தில் அசைவ உணவு சாப்பிடுவது நல்லதா? இதோ உங்களுக்கான பதில்

எனவே தான், கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், பல பெண்கள் கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடுவது பாதுகாப்பானதா? என்ற குழப்பம் ஏற்படும். இது குறித்த தகவலை தெரிந்து கொள்ள மகப்பேறு மருத்துவர் டாக்டர் விபா பன்சால் அவர்களிடம் பேசினோம்.

இந்த பதிவும் உதவலாம் : Pregnancy Foods: ​கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடலாமா?

அவர் கூறியதாவது, குழந்தைக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்க அசைவம் மிகவும் நல்லது என கூறப்படுகிறது. ஆனால் அதை சாப்பிடும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில், அது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என இந்த தொகுப்பில் பாக்கலாம்.

கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அதிக அளவு புரதம்

ஆடு, கோழி மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளில் உயர்தர புரதங்கள் காணப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் புரதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது உங்கள் குழந்தையின் உறுப்புகள், தசைகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பெண்களின் தசைகள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

இரும்பு சத்து

கர்ப்பிணிப் பெண்களுக்கு இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இரும்புச்சத்து கர்ப்ப காலத்தில் இரத்த சோகை குறைபாட்டை தடுக்கிறது. இந்த வகை அயர்ன் சத்துக்கள் சிவப்பு இறைச்சியில் (ஆடு, மாடு, பன்றி, பல பாலூட்டிகள்) காணப்படுகிறது. இவற்றில் இருந்து உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாக பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம் : கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை சமாளிக்க இதை செய்யுங்கள்!

ஒமேகா-3 கொழுப்பு அமிலம்

சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் ட்ரவுட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளனர். குறிப்பாக இதில் உள்ள DHA (டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம்), இது குழந்தையின் மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு அவசியம்.

வைட்டமின் பி

அசைவத்தில் பி12 போன்ற பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது நரம்பு மண்டலத்திற்கும் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கும் அவசியம்.

அசைவம் சாப்பிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை?

அசைவ உணவை நன்கு சமைக்கவும்: உணவினால் பரவும் நோய்களின் அபாயத்தைத் தவிர்க்க, அசைவ உணவை நன்கு சமைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.

இறைச்சியை நன்கு சுத்தம் செய்யவும்: ஆடு, கோழி அல்லது பிற அசைவ உணவுகளில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். இந்நிலையில், உங்கள் பாத்திரங்கள், கத்திகள், வெட்டு பலகை மற்றும் கைகளை நன்கு சுத்தம் செய்யுங்கள். மேலும், இறைச்சியை நன்கு கழுவிய பின்னரே சமைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : கர்பகால உடற்பயிற்சியின் நன்மைகள்; கர்பகாலத்தில் உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா? 

பதப்படுத்தப்பட்ட மீன்களை தவிர்க்கவும்: மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஆனால் சில சமயங்களில் மீன்கள் பதப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றை சாப்பிடுவதால், குழந்தைக்கு தீங்கு ஏற்படும். எனவே, மீன் வாங்கும் போது புதிய மீன்களை பார்த்து வாங்கவும்.

மருத்துவரின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அசைவம் போதுமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. ஆனால், இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகம். இதைத் தவிர்க்க, பெண்கள் சைவ உணவை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. எனவே, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Plums During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Disclaimer