இந்திய கலாச்சாரத்தில் பண்டைய காலங்களிலிருந்தே வெற்றிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் மத சடங்குகளில் வெற்றிலை மரியாதை மற்றும் விருந்தோம்பலின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இது தவிர, உணவுக்குப் பிறகு வாய் புத்துணர்ச்சியூட்டவும் இது சாப்பிடப்படுகிறது.
பல்வேறு இடங்களில் உணவு சாப்பிட்டப் பின் வெற்றிலை மடித்து பரிமாறப்படுகிறது. வெறும் வெற்றிலை மற்றும் பாக்கு, பீடா வடிவில் வெற்றிலை மடித்து, இன்றைய காலத்தில் புதிதாக வெற்றிலை அரைத்து பான் ஷாட் என்ற வடிவில் என பல வடிவில் உணவுக்கு பின் வெற்றிலை பரிமாறப்படுகிறது.
மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை உடனே கட்டுப்படுத்த இந்த ஒரு பழம் போதும்... BP-யை கட்டுப்படுத்த நாவல் பழத்தை இப்படி சாப்பிடுங்க!
கடினமான உணவு சாப்பிட்டாலோ குறிப்பாக அசைவ உணவு சாப்பிட்ட பிறகோ கண்டிப்பாக வெற்றிலை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுவது உண்டு, இது ஏன் என யோசித்தது உண்டா, இதற்கான பதிலையும் வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்துக் கொள்வோம்.
வெற்றிலை ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
வெற்றிலை செரிமானத்திற்கு உதவுகிறது, காற்று கோளாறுகளைக் குறைக்கிறது, மற்றும் பசியை அதிகரிக்கும் என ஆயுர்வேதத்தில் கூறப்படுவது உண்டு. இது மட்டுமல்ல வாய் துர்நாற்றத்தை போக்க, இருமலை குணப்படுத்த, தொண்டை, புண், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் சரியா இது நன்மை பயக்கும். உடலில் ஆற்றலை பராமரிக்கவும் வெற்றிலை பெரிதளவு பயனுள்ளதாக இருக்கும்.
செரிமான அமைப்பு மேம்படும்
அசைவம் சாப்பிட்டப்பின் பெரும்பாலானோர் சந்திக்கும் குறிப்பிடத்தக்க பிரச்சனை என்பது செரிமான தொடர்பான பிரச்சனைகள் மட்டுமே. வெற்றிலையை உட்கொள்வது அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. இதன் நுகர்வு பசியை அதிகரித்து செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சளி-இருமல் மற்றும் சுவாசக் கோளாறு
காயம், வீக்கம் அல்லது கட்டி ஏதேனும் இருந்தால் சூடான வெற்றிலையை கட்டுவது வலியைக் குறைத்து காயம் விரைவாக குணமாகும். இது இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது, இது வீக்கத்தைக் குறைக்கிறது.
வாய் துர்நாற்றத்தை நீக்கும்
வெற்றிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் சுத்தம் செய்ய முடியும் மற்றும் உமிழ்நீர் உருவாகும் செயல்முறை துரிதப்படுத்தப்படுகிறது. இது பற்கள் மற்றும் ஈறுகளையும் பலப்படுத்துகிறது.
மூட்டு வலி மற்றும் கீல்வாதம் பிரச்சனை
மூட்டு வலி மற்றும் கீல்வாதத்தைப் போக்க வெற்றிலை எண்ணெய் பயன்படுகிறது. வெதுவெதுப்பான நீரில் கலந்து தடவினால் வீக்கம் மற்றும் வலி குறையும்.
தொண்டை அழற்சிக்கு நன்மை பயக்கும்
தொண்டை அழற்சியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குழந்தைகளுக்கு 4 வெற்றிலை இலைகளின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம், இது நன்மை பயக்கும்.