$
Benefits Of Betel Leaf Oil: சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது பழங்காலம் முதலே வழக்கத்தில் இருந்து வரும் ஒன்றாகும். வெற்றிலையை கடுக்காய், மசாலா, சுண்ணாம்பு போன்றவை சேர்க்காமல் எடுத்துக் கொள்வது பல வழிகளில் நன்மையைத் தருகிறது. குறிப்பாக, சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளையும் குறைக்க வெற்றிலையைப் பயன்படுத்தலாம். அந்த வகையில் வெற்றிலை எண்ணெய் குறித்து தெரியுமா?
வெற்றிலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிக எளிதான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும். இதனை முடி மற்றும் சருமத்தில் தடவி வர பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். அந்த வகையில் வீட்டிலேயே எளிதான முறையில் வெற்றிலை எண்ணெயைத் தயார் செய்யலாம். இதில் வெற்றிலையில் இருந்து எண்ணெய் தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Back Acne Remedies: முதுகு பருக்களால் அவதியா? ஒரே இரவில் பருக்களைக் குறைக்க இதுல ஒன்னு யூஸ் பண்ணுங்க!
வீட்டிலேயே வெற்றிலை எண்ணெய் தயார் செய்வது எப்படி?
வீட்டிலேயே எளிதான முறையில் வெற்றிலை கொண்டு தயார் செய்யப்படும் வெற்றிலை எண்ணெய் செய்முறை குறித்து காணலாம்.
தேவையான பொருள்கள்
- செம்பருத்தி இலைகள் - 20-25
- வெற்றிலை - 6-8
- தேங்காய் எண்ணெய் - 200 மி.கி
- தண்ணீர் - 1 கிண்ணம்

வெற்றிலை எண்ணெய் தயாரிக்கும் முறை
- முதலில் வெற்றிலை எண்ணெயைத் தயார் செய்ய, அனைத்து இலைகளையும் சரியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.
- இதில் எண்ணெய் சூடான பின் அனைத்து இலைகளையும் சேர்க்க வேண்டும்.
- இந்த இலைகள் அனைத்தும் சிவப்பு நிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
- பிறகு எண்ணெய் ஆறியதும் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு இந்த எண்ணெயை பாட்டில் ஒன்றில் நிரப்பி வைக்க வேண்டும்.
- வேண்டுமானால் எடுத்து வைத்த சூடான எண்ணெயையும் தலையில் தடவிக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Heavy Periods Remedies: மாதவிடாயில் அதிக இரத்தப்போக்கால் அவதியா? இந்த வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க
எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்?
- இந்த வெற்றிலையை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
- அதே சமயத்தில் இந்த வெற்றிலை எண்ணெயை வாரத்திற்கு மூன்று முறை முடியில் மசாஜ் செய்து கொள்ளலாம்.
- மேலும் இந்த எண்ணெயை ஹெர்பல் ஷாம்பூவில் கலந்தும் தடவலாம்.
- இது தவிர, இந்த வெற்றிலை எண்ணெயை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்.
- இது தலைமுடியை அடர்த்தியாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது.

வெற்றிலை எண்ணெய் தரும் நன்மைகள்
- வெற்றிலை எண்ணெயை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும வறட்சி மற்றும் அரிப்பு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
- இந்த எண்ணயைத் தலைமுடியில் தடவி வர, முடி உடைதல், உதிர்வு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
- மேலும் வெற்றிலை எண்ணெய் தடவி வருவது சருமத்தில் ஏற்படும் வீக்கம், பிடிப்புகள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.
- இது சருமத்தில் உள்ள முகப்பரு பிரச்சனைகளை நீக்குவதுடன், சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது
- வெற்றிலை எண்ணெயை பற்களில் தடவுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தைக் குறைக்கலாம்.
- இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உடல் துர்நாற்றத்தையும் குறைக்கிறது.
இவ்வாறு வெற்றிலையில் இருந்து தயாரிக்கப்படும் வெற்றி எண்ணெய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. எனினும் ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது அல்லது மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Food Poisoning Remedies: ஃபுட் பாய்சனைக் குணப்படுத்த உதவும் சூப்பரான வீட்டு வைத்தியம்
Image Source: Freepik