Betel Leaves Rice Recipe: மாறிவரும் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் இன்று பலரும் பல்வேறு நோய் அபாயத்தைச் சந்தித்து வருகின்றனர். அதிலும், சிறு குழந்தைகள் முதலே இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இவ்வாறு நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்படும் இந்த ஆரோக்கியமற்ற பழக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க, நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஆனால் இந்த உடல்நலப் பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போது, வீட்டிலேயே சில வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் அதை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அந்த வகையில் பல வகையான பிரச்சனைகளிலிருந்து தீர்வு தருவதில் வெற்றிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிட்ட பிறகு வெற்றிலை எடுத்துக் கொள்வதை பழங்காலத்தினர் வழக்கமாகக் கொண்டனர். ஆனால், இதில் எண்ணற்ற நற்குணங்கள் நிறைந்துள்ளது. இதில் வெற்றிலை தரும் அற்புத நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Meal Timing: உணவு சாப்பிட சரியான நேரம் எது? நிபுணர்கள் கூறுவது இங்கே!
வெற்றிலை சாதம் தயார் செய்யும் முறை
வெற்றிலையில் நிறைந்துள்ள எண்ணற்ற நற்குணங்கள் குழந்தைகளுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது. வாரத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு வெற்றிலை அளிப்பது அவர்களின் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆனால், குழந்தைகள் பலரும் இதை விரும்ப மாட்டார்கள். இதற்கு வெற்றிலையை சாதமாக செய்து கொடுக்கலாம். இதில் வெற்றிலை சாதம் தயார் செய்யும் முறையையும், வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் காணலாம்.
தேவையான பொருள்கள்
- வெற்றிலை - 4
- கடுகு - கால் தேக்கரண்டி
- உளுந்து – அரை தேக்கரண்டி
- கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
- உளுந்து - அரை தேக்கரண்டி
- பூண்டு - 8 பல்
- கடலை - ஒரு கைப்பிடி அளவு
- பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 4
- கறிவேப்பிலை - 2 கொத்து
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- முந்திரி பருப்பு - சிறிதளவு

வெற்றிலை சாதம் செய்முறை
- முதலில் எப்போதும் போல சாதம் செய்து வடிகட்டி, ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாய் ஒன்றை எடுத்து அதில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- இதை தாளித்த பிறகு கடலை சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.
- பின், இதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தட்டிய பூண்டுப்பல் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- இதில் வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்து, கழுவி சுத்தம் செய்து, நீளவாக்கில் நறுக்கிய வெற்றிலையைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பிறகு கடைசியாக இந்த கலவையில் வடித்த சாதத்தை சேர்த்து கிளறினால், வெற்றிலை சாதம் தயாராகி விட்டது.
- இதை குழந்தைகளுக்கு பிரண்டை துவையலுடன் கொடுத்து வர, உடலில் நோயெதிர்ப்பாற்றல் பெருகி எலும்புகளை வலுவாக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Blueberries Benefits: உடல் எடை குறைப்பு முதல் இரத்த சர்க்கரை வரை! ப்ளூபெர்ரி தரும் அதிசய நன்மைகள்
வெற்றிலையின் ஊட்டச்சத்துக்களும், நன்மைகளும்
வெற்றிலையில் அயோடின் சத்துக்கள் பொட்டாசியம், அயோடின், வைட்டமின் ஏ, பி மற்றும் நிக்கோடினிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் பல்வேறு ஆரோக்கிய நலன்களைத் தருகிறது.
- வெற்றிலை உட்கொள்வது செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
- வெற்றிலை மென்று சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை போக்கவும், வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- இது வயிற்றிலிருந்து வாயுவை வெளித்தள்ள உதவுகிறது. வெற்றிலை உட்கொள்ளல் கல்லீரல், மண்ணீரல், இதயம் மற்றும் மூளை போன்றவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தைத் தருகிறது.
- வெற்றிலையானது நரம்பு மண்டலத்துக்கு வலிமை தருவதால், குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வர நினைவாற்றலை அதிகரிக்கும்.
- வெற்றிலை இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.

இவ்வாறு வெற்றிலையை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. எனினும், புதிதாக எந்தவொரு உணவுப் பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரைக் கலந்தாலோசித்து எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric Milk Benefits: இரவில் மஞ்சள் பால் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா.?
Image Source: Freepik