Plums During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • SHARE
  • FOLLOW
Plums During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


பிளம்ஸின் ஊட்டசத்துக்கள்

பிளம்ஸ் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் பழமாகும். மேலும், இவை வடிவங்கள் மற்றும் அளவுகளில் மாறுபடுகின்றன. இவற்றில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ள பிளம்ஸ் பழத்தை கர்ப்பிணி பெண்கள் தினமும், ஐந்து முதல் ஏழு வரை உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Test Kit: கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்துவது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பிளம்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளைக் காணலாம்.

இரத்த சோகையை எதிர்த்துப் போராட

கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலானோர் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை அனுபவிக்கின்றனர். பிளம் பழம் இரும்புச்சத்து நிறைந்த பழமாகும். எனவே, கர்ப்ப காலத்தில் பிளம்ஸ் போன்ற பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை நோயைத் தடுக்கலாம். கர்ப்ப காலத்தில் பிளம்ஸ் சாப்பிடுவதால் புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்து இரும்புச்சத்து குறைபாட்டை நீக்க உதவுகிறது.

மனக்கவலை நீங்க

கர்ப்பம் தொடர்பான மனக்கவலை என்பது கர்ப்பிணி பெண்களுக்கு சாதாரணமாக எழக்கூடியதாகும். பிளம்ஸில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது கர்ப்பிணி பெண்களுக்கு நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்கிறது.

குறைப் பிரசவத்தைத் தடுக்க

பிளம்ஸில் அதிக அளவிலான மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது கர்ப்பப்பை வாய் தசைகளை தளர்த்த உதவுகிறது. மேலும் இவை முன்கூட்டிய சுருக்கங்கள் மற்றும் முன் கூட்டியே பிரசவம் ஏற்படுதலைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Premature Birth Symptoms: குறைபிரசவம் ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும்

எலும்பு வலுவாக்க

பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ சத்துகள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும் இவற்றில் பொட்டாசியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையானவை ஆகும்.

நீரேற்றமாக வைக்க

கர்ப்பிணி பெண்கள் தங்களது உடலை நீரேற்றமாக வைத்திருக்க வைத்துக் கொள்ள பிளம்ஸ் பழம் உதவுகிறது. அவ்வப்போது, இந்த பழத்தின் ஜூஸ் அருந்தி வந்தால் உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தைகளைப் பாதிக்கக் கூடிய வகையில் நோய்த்தொற்றுகள் அதிகமாக தாக்கலாம். இவற்றைத் தடுக்க, பிளம்ஸ் ஜூஸ் ஒரு சிறந்த தீர்வாகும். இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Twins Pregnancy Foods: இரட்டைக் குழந்தை பெற வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க.

Image Source: Freepik

Read Next

Intelligent Baby Birth: புத்திச்சாலித்தனமான குழந்தை பெற கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை

Disclaimer

குறிச்சொற்கள்