Health Benefits of Plum: தக்காளி பழம் போல் தோற்றமளிக்கும் சிவப்பு நிற சிறிய ரக பழமாக இருப்பதுதான் ப்ளம். இது சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும். ப்ளம்ஸ் பழம் பெரும்பாலும் மவைப் பிரதேசத்தில் விளையும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பழமாகவும் இருக்கிறது.
ப்ளம் பழத்தை பலரும் சுவைக்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இதன் நன்மைகளை அறிந்துக் கொண்டால், கண்டிப்பாக இதை தவறாமல் தேடித்தேடி வாங்கிச் சாப்பிடுவீர்கள்.
ப்ளம்ஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Health Benefits of Plum)
எடை இழப்பு
உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் பிளம்ஸ் சிறந்த தேர்வாகும். இந்த பழத்தில் கொழுப்பு மிகக் குறைவு. சில ஆராய்ச்சிகளில் பிளம்ஸ் உங்களை முழுமையாக உணர வைப்பதாகவும், குறைவாக சாப்பிட உதவும் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாகவே உங்கள் தினசரி உணவில் பழங்களை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. அதேசமயத்தில் உடல் எடையும் கட்டுக்குள் வைக்க உதவும்.
இதய ஆரோக்கியம்
பிளம்ஸில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன. பிளம்ஸை தொடர்ந்து உட்கொள்வது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது.
எலும்பு ஆரோக்கியம்
பிளம்ஸின் சிறந்த ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். ஏனென்றால் பிளம்ஸில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானவை.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
பிளம்ஸில் கார்போஹைட்ரேட் சற்று அதிகமாக இருந்தாலும், இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது பிளம்ஸ் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோயைக் குறைக்கலாம். இது தவிர, பிளம்ஸ் இரத்த சர்க்கரையை மெதுவாக உயர்த்த உதவுகிறது மற்றும் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதல் வீதத்தை குறைக்கிறது.
மூளை மற்றும் நினைவாற்றல் ஆரோக்கியம்
பிளம்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், அவை அல்சைமர் நோயின் வளர்ச்சியை மெதுவாக்கும். இதில் ஆந்தோசயனின் மற்றும் க்வெர்செடின் உள்ளது, இது மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.
பிளம் பழத்தின் பிற நன்மைகள்
இது பதட்டத்தை குறைக்க உதவும்
மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
செல் சேதம்/புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது
நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது
கலோரி உட்கொள்ளலை குறைக்க உதவும்
உடலில் அதிக கலோரிகள் இருப்பதால், உங்கள் எடை திடீரென அதிகரிக்கலாம். உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதை குறைக்க, உங்கள் உணவில் பிளம்ஸை சேர்க்க வேண்டும். இதில் மிகக் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால், நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடல் நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்ததாக உணர்கிறது.
வைட்டமின் சி
வைட்டமின் சி உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்ற உதவும். இதனால் உடல் கொழுப்பை குறைக்கலாம். இது உங்கள் உடலை உள்ளே இருந்து வலிமையாக்குகிறது. அதனால் நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமை அதிகரிக்கிறது. மேலும், இது உங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.
Image Source: FreePik