Doctor Verified

Oral Health During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் வாய்வழி ஆரோக்கியத்தை கடைபிடிப்பது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Oral Health During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் வாய்வழி ஆரோக்கியத்தை கடைபிடிப்பது எப்படி?


கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், ஈறுகளில் எரிச்சல் அல்லது வீக்கம் போன்றவை ஏற்படலாம். அது மட்டுமின்றி, கர்ப்பகாலத்தில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை கடுமையான பல் நோய்களை உண்டாக்கலாம். இது தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஆபத்தை விளைவிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் வாய்வழி சுகாதாரத்தைப் பேணிக்காப்பது அவசியம். இது குறித்து, Dezy.com-ன் இணை நிறுவனர் டாக்டர் ஜதின் சுக்ரானி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Miscarriage Symptoms: கருச்சிதைவு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

கர்ப்பிணி பெண்கள் வாய்வழி சுகாதாரத்தைக் கவனிப்பதற்கான குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல வாய் ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம்.

இரு முறை பல் துலக்குதல்

வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க, ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்குவது அவசியமாகும். கர்ப்பிணி பெண்கள் வாய்வழி சுகாதாரத்தைக் கவனித்துக் கொள்வது மிக முக்கியமானது. கர்ப்ப காலத்தில் பல் பிரச்சனைகள் அதிகமாக இருக்கலாம். எனவே, காலை நேரத்திலும் இரவு தூங்கும் முன்பும் பல் துலக்குவது அவசியம். இந்த காலகட்டத்தில், பற்களின் உணர்திறன் அதிகமாகலாம். இந்நிலையில் மருத்துவ ஆலோசனையின் பேரில் பற்பசையை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், மவுத்வாஷ் பயன்படுத்தலாம்.

நீரேற்றமாக இருப்பது

கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்களது உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். இது காலை நோயைக் குணப்படுத்த உதவும். மேலும், பாக்டீரியா போன்றவையும் வாயில் இருந்து அகற்றப்படும். தண்ணீர் குடிப்பதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கலாம். இது ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தைத் தவிர்க்க உதவுகிறது.

பிளேக் தவிர்த்தல்

சில பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் பிளேக் குவிப்புகள் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் பிளேக் குவிவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது தாய்க்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கலாம். இந்நிலையைத் தடுக்க, பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Twins Pregnancy Foods: இரட்டைக் குழந்தை பெற வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க.

ஆரோக்கியமான உணவுமுறை கையாள்வது

கர்ப்ப காலத்தில், பெண்கள் வாந்தி மற்றும் குமட்டல் போன்றவற்றை அதிகம் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாயில் சுவையின்றி போகலாம். இந்த சூழ்நிலையில், வாந்தியெடுத்த பிறகு ஃப்ளூரைடு மவுத் வாஷ் பயன்படுத்தலாம். அதே சமயம், வாந்தி எடுத்த பின்னர் உடனேயே பல் துலக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், வாந்தியெடுப்பதால், வயிற்றில் உள்ள அமிலம் எனாமலை வலுவிலக்கச் செய்யலாம். மேலும், இந்த சூழ்நிலையில் ஆரோக்கியமான வாய்வழி சுகாதாரத்திற்கு கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், பற்சிதைவிலிருந்து விடுபட சர்க்கரை மற்றும் அமில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்கவும்.

பற்கள் பரிசோதித்தல்

கர்ப்பிணி பெண்கள் பலரும் கர்ப்ப காலத்தில் பற்களை பரிசோதிப்பது கிடையாது. இது குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கலாம். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் பற்களைத் தவறாமல் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும், இந்த காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஈறுகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இவை தொற்றுநோயை அதிகரித்து கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே, கர்ப்பிணி பெண்கள் பற்களைத் தவறாமல் சரிபார்க்க வேண்டும். மேலும், இது பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

எனவே கர்ப்பிணி பெண்கள் வாய் சுகாதாரத்தை பராமரிப்பது நல்லது. இது கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய இருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாகவும் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Intelligent Baby Birth: புத்திச்சாலித்தனமான குழந்தை பெற கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை

Image Source: Freepik

Read Next

Pregnancy Care: கர்ப்பிணிக்கு அவசியம் தேவைப்படும் புரத உணவுகள் இங்கே!

Disclaimer