Thu Oct 29, 2026 | 02:35 PM IST

Oral Hygiene Routine: வாய்வழி சுகாதாரத்தின் 3 முக்கிய அம்சங்கள்…

Oral Hygiene Routine: வாய்வழி சுகாதாரத்தின் 3 முக்கிய அம்சங்கள்…Oral Hygiene Routine: வாய்வழி சுகாதாரத்தின் 3 முக்கிய அம்சங்கள்…

Good Oral Hygiene Routine: நாம் யாரையாவது சந்திக்கும்போது முதலில் புன்னகைக்கிறோம். நமது புன்னகை தான் உலகளாவிய மொழி. இதில் நமது வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது பற்கள் கறைகளுடனும், வாய் வாய் துர்நாற்றத்துடனும் இருந்தால், நம்மால் சிரிக்கவோ, பிறரிடம் பேசவோ தயக்கமாக இருக்கும். நம் அருகில் வரவும் சிலர் யோசிப்பார்கள். இதனால் வாய் ஆரோக்கியம் மிக முக்கியம்.

பற்களைப் பராமரிப்பது என்பது உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகும். பல் துலக்குதல், வாய் கொப்பளித்தல் ஆகியவை அடித்தளம். ஆனால் உங்கள் பற்களை விட உங்கள் வாயின் ஆரோக்கியத்திற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

ஒரு சிறந்த வாய்வழி சுகாதாரம் என்ன?

வாய் சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் வயது, தொழில், உணவுமுறை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து. ஒவ்வொருவரின் வழக்கமும் சற்று வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், வாய்வழி சுகாதாரத்தின் சில அம்சங்கள் உலகளாவியவை.

தினசரி பராமரிப்பு, வழக்கமான சோதனைகள் மற்றும் சுத்தம் செய்தல் போன்றவை அனைவரும் செய்யும் ஒன்று. குறிப்பாக இனிப்பு கொண்ட உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை அனைவரும் தவிர்க்க வேண்டும். இது வாய்வழி சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாய்வழி சுகாதார குறிப்புகள்

வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்த மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. அவை இங்கே…

பல் துலக்குதல்

இரு நாளைக்கு காலை இரவு என இரண்டு முறை பல் துலக்க வேண்டும். வாயின் ஒவ்வொரு பகுதியிலும் 30 வினாடிகள் நன்கு தேய்த்து, குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு பல் துலக்கவும். இதை செய்வதற்கு கடினமாக இருந்தால், எலெக்ட்ரிக் பிரஷ் கொண்டு பல் துலக்கவும். இதில் டைமர் இருக்கும். அவை இரண்டு நிமிடங்களுக்கு இயங்கும் மற்றும் ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் பீப் ஒலிக்கும். இதன் மூலம் சரியான முறையில் பல் துலக்க முடியும்.

பிரஷ்-ஐ உங்கள் பல்லின் மேற்பரப்பில் 45 டிகிரி கோணத்தில் பிடித்து உங்கள் ஈறுகளை தேய்க்கவும். முன் மற்றும் பின் பரப்புகளில் மேலும் கீழும், முன்னும் பின்னுமாக பிரஷ் செய்யவும். அனைத்து தளங்களையும் தேய்க்க மறக்காதீர்கள்.

காலை வாய்வழி வழக்கம் காலை உணவுக்கு முன் அல்லது சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணிநேரம் பிறகு செய்ய வேண்டும். குறிப்பாக அமில தன்மை கொண்ட உணவுகளை உட்கொண்டிருந்தால், ஒரு மணிநேரம் பிறகு பல் துலக்க வேண்டும். இல்லையெனில் பற்கள் சேதமாகும்.

ஃப்ளோஸ் செய்யவும்

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்கள் பற்கள் அனைத்தையும் ஃப்ளோஸ் செய்யுங்கள். இதனை இரவு படுக்கைக்கு செல்லும் முன் செய்வது நல்லது. ஃப்ளோஸிங் பற்களுக்கு இடையில் மறைந்திருக்கும் உணவுத் துகள்களை வெளியே இழுத்து, பிளேக்கை தளர்த்த உதவுகிறது.

ஒவ்வொரு பல்லுக்கும் ஒரு சுத்தமான ஃப்ளோஸைப் பயன்படுத்தவும். இது ஒன்றரை அடி இருக்கும். உங்கள் ஆள்காட்டி விரல்களைச் சுற்றி ஃப்ளோஸைக் கட்டி, ஒவ்வொரு பல்லுக்கும் இடையில் மெதுவாக, மேலும் கீழும் தேய்க்கவும். ஃப்ளோஸ் அழுக்காகிவிட்டால், அடுத்த பல்லுக்கு சுத்தமான பகுதியை பயன்படுத்தவும்.

நீளமான ஃப்ளோஸ்ஸைப் பயன்படுத்துவது உங்களுக்கு அருவருப்பானதாக இருந்தால், சிறிய ஃப்ளோசர்களை வாங்கலாம். ஒரு அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்ட ஃப்ளோஸ் கொண்ட பிளாஸ்டிக் ஹோல்டரை வாங்கலாம். ஒவ்வொரு அமர்விற்கும் ஒன்றுக்கு மேற்பட்டவை உங்களுக்குத் தேவைப்படலாம்.

வாயை கொப்பளிக்கவும்

பல் துலக்கிய பின்னும், ஃப்ளோஸ் செய்த பிறகு கடைசியாக செய்ய வேண்டியது வாயை கொப்பளிப்பதுதான். இதற்கு மவுத் ஃப்ரெஷ்னர் பயன்படுத்தலாம். குறைந்தது 30 வினாடிகளுக்கு நன்கு வாயை கொப்பளிக்க வேண்டும். இந்த எளிய செயல், பல் துலக்குதல் மற்றும் ஃப்ளோஸ் செய்வது கூட தவறவிடக்கூடிய பற்பசை மற்றும் உணவின் நுணுக்கங்களை அகற்ற உதவுகிறது. மேலும் இது உங்கள் வாயை முற்றிலும் புத்துணர்ச்சியடையச் செய்கிறது.

Image Source: Freepik

Read Next

→ Parkinson's Disease Causes: பார்கின்சன் நோய் பற்றி தெரியுமா? நோய்க்கான காரணங்களும் அறிகுறிகளும் இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.