Ways of maintaining oral hygiene: அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு தினசரி பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். அவ்வாறே, பற்களைத் துலக்குவதை தினந்தோறும் செய்யக்கூடிய பழக்கம் ஆகும். ஆனால், பற்களைத் துலக்குவதால் மட்டும் வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியுமா? உண்மையில், பல்துலக்குதல் மட்டும் வாய்வழி சுகாதாரத்திற்கு முக்கியமல்ல. பற்களை ஆரோக்கியமாக மற்றும் சுத்தமாக வைத்திருப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் பல் துலக்குதல் போதாது.
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு வாய்வழி சுகாதாரம் முக்கியமானதாகும். இதன் மூலம் துவாரங்கள், ஈறு நோய்கள் அல்லது வாய் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கலாம். இதற்கு மென்மையான முட்கள் கொண்ட தூரிகை மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கலாம். இதன் மூலம் ஈறு நோய் மற்றும் துவாரங்களைத் தடுக்க நாள்தோறும் ஃப்ளோஸ் செய்யலாம். இதற்கு ஆல்கஹால் இல்லாத மவுத்வாஷைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: ஜாக்கிரதை… வாயில் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்!
சிறந்த வாய்வழி சுகாதாரத்திற்கான பராமரிப்பு நடவடிக்கைகள்
சரியான முறையில் பல் துலக்குவது
பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க, சரியான முறையில் பல் துலக்குவது மிகவும் முக்கியமாகும். பல் துலக்குவதற்கு மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்குதல் மற்றும் ஃவுளூரைடு பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு இரு முறையாவது பல் துலக்குதலை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். காலை மற்றும் படுக்கைக்கு முன்னதாக மென்மையான வட்ட இயக்கங்களைப் பயன்படுத்தலாம். ஈறு மற்றும் நாக்கு உட்பட பற்களின் அனைத்து மேற்பரப்புகளையும் துலக்க வேண்டும். இதில் நாம் பல் துலக்குதலை 3-4 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மேலும் முட்கள் உதிர்ந்திருந்தால் விரைவில் மாற்ற வேண்டும்.
Flossing செய்வது
பல் துலக்கும் போது, வாயின் அனைத்து பகுதிகளையும் சென்றடையாத சூழல் ஏற்படலாம். இதில் அடைய முடியாத பகுதிகளிலிருந்து ஃப்ளோசிங் பிளேக் மற்றும் உணவுத் துகள்களை நீக்குவதாக அமைகிறது. இந்த ஈறு நோய் மற்றும் துவாரங்களைத் தடுக்க ஃபிளோசிங் செய்வதை தினசரி பழக்கமாக உருவாக்க வேண்டும். பற்களுக்கு இடையில் ஃப்ளோஸை மெதுவாக சறுக்கவும். ஒவ்வொரு பல்லுக்கும் ஃப்ளோஸின் சுத்தமான பகுதியைப் பயன்படுத்தலாம். ஃப்ளோஸிங் சிரமமாக இருப்பின், பல் தூரிகைகள் அல்லது வாட்டர் ஃப்ளோசர்களை முயற்சிக்கலாம்.
மவுத்வாஷ் கொண்டு துவைப்பது
ஒரு நல்ல மவுத்வாஷ் பயன்படுத்துவது பிளேக்கை குறைக்கவும், வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடவும் முடியும். மேலும் இது ஈறு நோயைத் தடுக்க உதவுகிறது. எனினும், பற்சிப்பியை வலுவாக வைப்பதற்கு ஃபுளூரைடு கொண்ட ஆல்கஹால் அல்லாத மவுத்வாஷைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே முழுமையான பாதுகாப்பிற்காக துலக்குதல் மற்றும் ஃப்ளோஸ் செய்த பிறகு மவுத்வாஷைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா? பற்கள் சேதமடைவது உறுதி!
தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்ப்பது
பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க புகைபிடிக்கவோ அல்லது புகையிலை பொருட்களை பயன்படுத்தவோ கூடாது. ஏனெனில் இவை ஈறு நோய் அல்லது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம். பற்கள் வெட்டப்படுவதைத் தவிர்க்க ஐஸ் அல்லது பேனா போன்ற கடினமான பொருள்கள் மெல்லுவதைத் தவிர்க்க வேண்டும்.
பல் ஆரோக்கிய உணவுகள்
வாய் ஆரோக்கியத்தைக் கணிசமாக பாதிப்பதில் நாம் சாப்பிடும் உணவுகளும் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்துகிறது. மேலும் பால், சீஸ் மற்றும் தயிர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது பற்களை வலுப்படுத்த உதவுகிறது. உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுவதற்கு ஆப்பிள் மற்றும் கேரட் போன்ற மொறுமொறுப்பான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம், சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது பற்களின் குழிவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இத்தகைய ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம், வாய் வழி சுகாதாரத்தை பராமரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Oral Care: மழைக்காலத்தில் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த சூப்பர் டிப்ஸ்.!
Image Source: Freepik