Oral Hygiene: வாய்வழி சுகாதாரத்தைப் பராமரிக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்க

  • SHARE
  • FOLLOW
Oral Hygiene: வாய்வழி சுகாதாரத்தைப் பராமரிக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்க


Tips To Maintain Oral Hygiene: வாய்வழி சுகாதாரம் என்பது எந்தவகை நோயின்றியும், வாயை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும் ஒரு வகையான தடுப்பு பராமரிப்பு முறையாகும். ஆனால், வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பது நமது பற்களை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்ல, அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முக்கியமானதாகும். ஏனெனில் ஆரோக்கியமற்ற வாய்வழி சுகாதாரம் இதய நோய்களை வளர்ப்பதற்கு முக்கியமாக பங்களிக்கிறது. மேலும் இந்த மோசமான வாய்வழி சுகாதாரம் பிளேக், கால்குலஸ் மற்றும் ஈறு வீக்கம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கிறது என ஆய்வுகளில் கூறப்படுகிறது.

இன்று பலரும் வாய்வழி ஆரோக்கியம் குறித்து கவலைப்படுத்துவதில்லை. ஆனால், முறையற்ற சுகாதாரம் குழந்தைகள், பெரியவர்கள் என இருவருக்கும் பற்களில் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட வழிவகுக்கிறது. எனவே வாய்வழி ஆரோக்கியத்தின் தீவிரத்தை புரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதற்கு, வாய்வழி ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளைச் சரியாக பின்பற்ற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Kashayam: அதிக காய்ச்சலுடன் சளி, இருமலா? டக்குனு சரியாக இந்த கஷயாத்தை குடிங்க

ஆரோக்கியமான பல் பராமரிப்பு குறிப்புகள்

பற்களை மென்மையான வட்ட இயக்கங்களில் துலக்குவது, செப்பு நாக்கைத் தெளிவாகப் பயன்படுத்துவது போன்ற வீட்டு பராமரிப்பு நடவடிக்கைகளைச் செய்வதன் மூலம் ஒருவரின் வாய்வழி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். மேலும் உணவுகளுக்கு இடையே ஆல்கஹால் இல்லாத மவுத்வாஷை தேர்வு செய்வது, புகைபிடித்தல் போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் வாய்வழி ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கலாம்.

ஏனெனில், இது பற்கள் இழப்பை ஏற்படுத்தலாம். கூடுதலாக, நகம் கடிப்பது போன்ற செயல்களையும் தவிர்க்க வேண்டும். மேலும், அவ்வப்போது ஒரு நல்ல பல் நிபுணரை அணுகி பற்களை சரிபார்த்துக் கொள்வதன் மூலம், தடுப்பு பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்கு வழிகாட்ட முடியும். இவ்வாறு நல்ல மற்றும் சரியான சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலம் பற்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

avoid-brushing-teeth-during-these-situations

தினசரி வாய்வழி சுகாதாரத்திற்கான முக்கிய செயல்பாடுகள்

பல் துலக்குதல்

அன்றாடம் பல் துலக்குவது பற்களில் உள்ள கிருமிகளை அகற்ற உதவுகிறது. எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்குவதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். அதே சமயம், மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்குதல் மற்றும் ஃப்ளூரைடு பற்பசையை எப்போதும் பயன்படுத்த வேண்டும். மேலும் பற்களிலிருந்து குப்பைகள் மற்றும் பிளேக் போன்றவற்றை திறம்பட அகற்றுவதற்கு வட்ட இயக்கத்தில் மென்மையாக துலக்க வேண்டும்.

மவுத் வாஷ்

பல் பராமரிப்பு முறையில், மவுத்வாஷை இணைப்பது வாய்வழி சுகாதாரத்தைப் பாதுகாக்கலாம். அதன் படி, ஆண்டிமைக்ரோபியல் மவுத்வாஷைப் பயன்படுத்துவது வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் பிளேக் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. பல் துலக்குதலுடன், மவுத்வாஷ் செய்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Whooping Cough Remedies: உங்க குழந்தைக்குத் தொடர்ச்சியான இருமலா? இந்த வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க

ஃப்ளோஸிங்

மக்கள் பலரும் ஃப்ளோஸிங் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். பல் துலக்கும் போது வாயிலிருந்து சிறிய உணவுத்துகள்கள் மற்றும் தகடுகளை அகற்ற முடியாமல் போகலாம். இதைத் தவிர்க்க ஃப்ளோசிங் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, படுக்கைக்கு முன்னதாக Flossing செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

நீரேற்றமாக இருப்பது

நாள் முழுவது அதிகளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உணவுத் துகள்கள் மற்றும் நுண்ணுயிரிகளைக் கழுவ முடியும். அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் நீரேற்றத்துடன், வாயை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கவும், அமிலங்களை நடுநிலையாக்கி பற்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல்

சர்க்கரை மற்றும் அமில உணவுகள், பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், இவை பல் சிதைவு மற்றும் அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சீரான உணவைத் தேர்வு செய்வது ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்திற்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.

பல் துலக்குதலை மாற்றுதல்

ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது முட்கள் வறண்டு போனதாக இருப்பின், பல் துலக்குதலை மாற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், தேய்ந்து போன பல் துலக்குதல் பிளேக் மற்றும் நுண்ணுயிரிகளை அகற்றுவது கடினம். எனவே, பல் துலக்குதல் தேய்ந்து அல்லது வறண்ட முட்கள் கொண்டதாக இருப்பின், வேறு பல் துலக்குதலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த ஆரோக்கியமான வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தை எளிதாக பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Betel Leaf Oil: சருமம், முடி பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் மந்திர எண்ணெய்! ஈஸியான முறையில் இப்படி செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Homemade Kashayam: அதிக காய்ச்சலுடன் சளி, இருமலா? டக்குனு சரியாக இந்த கஷயாத்தை குடிங்க

Disclaimer