Pregnancy Care: கர்ப்பிணிக்கு அவசியம் தேவைப்படும் புரத உணவுகள் இங்கே!

  • SHARE
  • FOLLOW
Pregnancy Care: கர்ப்பிணிக்கு அவசியம் தேவைப்படும் புரத உணவுகள் இங்கே!


இதனால் பெண்கள் கருத்தரித்த உடன், அவர்களுக்கு தேவையான உணவுகளை பட்டியலிட வேண்டும். குறிப்பாக புரதம் நிறைந்த உணவுகளை (Protein Foods) திட்டமிட்டு தொடங்கவும். கர்ப்பிணிக்கு அவசியம் தேவைப்படு புரத உணவுகள் இங்கே. 

பால் பொருட்கள்

புரதத்தின் நல்ல ஆதாரமாக பால் பொருட்கள் திகழ்கின்றன. ஆகையால் தினமும் உணவில் தயிர், பால், காட்டேஜ் சீஸ் மற்றும் பனீரை இணைத்துக்கொள்ளவும்.

இதையும் படிங்க: Baby Brain Food: கருவிலேயே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் உணவுகள் எவை? 

நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகள் புரதத்தின் நல்ல ஆதாரமாகும். பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் மற்றும் சூரியகாந்தி, பூசணி போன்ற விதைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பருப்பு வகைகள்

பட்டாணி, ராஜ்மா, சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளை கண்டிப்பாக உணவில் இணைத்துக்கொள்ள வேண்டும். 

ஓட்ஸ்

புரதத்தின் சிறந்த ஆதாரமாக ஓட்ஸ் திகழ்கிறது. ஆகையால் ஓட்ஸில் செய்யப்பட்ட மஃபின்கள் மற்றும் குக்கீகளை சேர்த்துக்கொள்ளவும். இது கர்ப்ப காலத்தில், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. 

இறைச்சி

கருவில் உள்ள குழந்தையின் மூலை வளர்ச்சியில் ஒமேகா 3 கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்காக மீன், கோழியை உட்கொள்ளவும். பாதரசம் அதிகமுள்ள மீன்களை தவிர்க்கவும். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கலாம். 

கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்கள் உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணரிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும். 

Image Source: Freepik

Read Next

கர்ப்பமாக இருக்கும் போது கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கிறீங்களா? - இதை அவசியம் படிங்க!

Disclaimer

குறிச்சொற்கள்