Doctor Verified

Baby Brain Food: கருவிலேயே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் உணவுகள் எவை?

  • SHARE
  • FOLLOW
Baby Brain Food: கருவிலேயே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் உணவுகள் எவை?

ஜிம்மி ஸ்கேன் இயக்குநரான மருத்துவர் தீப்தி ஜம்மி பகிர்ந்துள்ள சில பயனுள்ள குறிப்புகள் இதோ…

1.ஃபோலிக் அமிலம்:

குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளராக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள ஃபோலிக் ஆசிட் சப்ளிமெண்ட்களுடன், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, வைட்டமின் சி மற்றும் பச்சை காய்கறிகள் என ஃபோலிக் அமிலம் நிறைந்த இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டு,. தினமும் நான்கு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

food-to-eat-and-avoid-for-speed-recover-from-dengue-fever

கர்ப்ப காலத்தில் கேரட், பீட்ரூட், தக்காளி, பருப்பு, வாழைப்பழம், வேர்க்கடலை, இறால் போன்றவற்றை சாப்பிட்டால், கருவில் இருக்கும் குழந்தை. நல்ல புத்திசாலித்தனத்துடன் பிறக்கும். அத்துடன் மாதுளம் , பேரீச்சம்பழம், திராட்சை, பீன்ஸ் மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது உங்களுக்கு அதிக இரும்புச்சத்தையும் வழங்கிறது.

2.ரொட்டி மற்றும் முழு தானியங்கள்:

ரொட்டி மற்றும் தானியங்கள் கார்போஹைட்ரேட்டின் முக்கிய மூலமாகும், இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. இதில் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் ஆறு முதல் பதினொரு வேளை ரொட்டி அல்லது தானியங்களைச் சாப்பிட வேண்டும். இது கர்ப்பிணிகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு, குழந்தையின் மூளை வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

3.வைட்டமின் டி:

கர்ப்பிணிகள் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். வேகவைத்த முட்டை, மீன், இறைச்சி, முழு தானியங்கள், கீரை ஆகியவற்றில் வைட்டமின் டி உள்ளது.

மேலும் காலை மற்றும் மாலை வேளையில் இளம் வெயில் நேரத்தில் வாக்கிங் செல்வதும் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்க உதவும்.

4.நட்ஸ், பருப்பு வகைகள்:

கர்ப்பிணிகள் பாதாம், வால்நட், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நட்ஸில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்.

5.முட்டை:

முட்டையில் கோலின் என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது, இது குழந்தைகளின் மூளை மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் இரண்டு முட்டைகளை உட்கொள்ள வேண்டும், இதனால் அவர்கள் கர்ப்ப காலத்தில் தினசரி கோலின் அமினோ அமிலத்தைப் பெறலாம்.

முட்டையில் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது குழந்தையின் எடை அதிகரிக்க உதவுகிறது. சில பெண்களுக்கு குறைந்த எடை மற்றும் கணிசமான அளவு IQ-வை விட குறைவாக உள்ள குழந்தைகள் பிறப்பதை தவிர்க்க முட்டை உதவக்கூடும்.

6.ஒமேகா-3 கொழுப்பு அமிலம்:

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் விழித்திரையின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மனச்சோர்வை தடுக்கிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தை உடலில் உற்பத்தி செய்ய முடியாது, எனவே அதை உங்கள் உணவில் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். டுனா மற்றும் சால்மன் போன்ற எண்ணெய் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.

மேலும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது, அதிக தண்ணீர் குடிப்பது, எடையை கட்டுக்குள் வைப்பது, புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை தவிர்ப்பது, முறையான நடைபயிற்சி ஆகியவையும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image Source: Freepik

Read Next

thyroid in pregnancy: கர்ப்ப காலத்தின் தைராய்டு அளவுகளும், தீர்வுகளும்!

Disclaimer