குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய விஷயங்கள்!

  • SHARE
  • FOLLOW
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய விஷயங்கள்!


ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை உலகில் தாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத உயரத்தை அடைய விரும்புகிறார்கள். குழந்தை பிறந்த உடனேயே, பெற்றோர்கள் அவர்களது உணவுப் பழக்கம், அழுகை, சிணுங்கல் மற்றும் தூங்கும் முறைகளில் கூட கவனம் செலுத்துகிறார்கள்.

குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி சரியாக நடைபெற பெற்றோர்கள் சிலவற்றை செய்கிறார்கள். இவ்வளவு செய்தாலும் சில தவறுகள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். அப்படிப்பட்ட 5 விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். டாக்டர் தருண் ஆனந்த், குழந்தைகள் நல மருத்துவர், லக்னோ இதுகுறித்து கூறிய தகவலை பார்க்கலாம்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்கள்

குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மோசமான ஊட்டச்சத்து

6 மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் சரியான மூளை வளர்ச்சிக்கு சீரான உணவு மிகவும் முக்கியமானது. பெற்றோர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் திடமான உணவில் போதுமான அளவு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தூக்கமின்மை

மூளை ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. உங்கள் பிள்ளை போதுமான ஓய்வு பெறுவதற்கு ஒரு வழக்கமான படுக்கை நேரத்தை அமைக்கவும். குழந்தை போதுமான தூக்கத்தைப் பெறுவதை உறுதிசெய்ய, குழந்தைக்கு ஒரு தூக்க முறையை உருவாக்கவும்.

அதிகப்படியான திரை நேரம்

நீண்ட நேரம் மொபைலைப் பயன்படுத்துவது அல்லது மொபைல் திரையில் கேம்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்ப்பது குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஒரு குழந்தை தொலைபேசியைப் பயன்படுத்தும்போது, ​​​​அவர் மணிநேரங்களுக்கு ஒரே நிலையில் இருக்கிறார். இதனால் உடல் நிலை கெட்டுவிடும்.

உங்கள் குழந்தையின் மூளை சரியாக வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய, திரை நேரத்தை குறைக்கவும். குழந்தையுடன் விளையாடுங்கள். குழந்தைகளை பூங்காவில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்.

நாள்பட்ட மன அழுத்தம்

உங்கள் வீட்டில் மிகவும் மன அழுத்தம் நிறைந்த சூழல் இருந்தால், அது குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கிறது. பெற்றோர்கள் எப்பொழுதும் கோபமாகவும் எரிச்சலுடனும் இருப்பதன் காரணமாக குழந்தைக்கு நாள்பட்ட மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக குழந்தையின் மன வளர்ச்சி சரியாக ஏற்படாது. இதைத் தடுக்க, வீட்டில் ஆதரவான மற்றும் அன்பான சூழலை உருவாக்குங்கள்.

கற்றல் மற்றும் ஆர்வம்

கற்றல் மற்றும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் செயல்களில் உங்கள் குழந்தையை ஈடுபடுத்துங்கள். உங்கள் பிள்ளை சிறிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்தால், அவருடைய மூளை சரியாக வளரவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் உங்கள் மருத்துவரிடம் பேசலாம்.

உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவது கூடுதல் சிறப்பாகும்.

Image Source: FreePik

Read Next

Hepatitis Infection: குழந்தைகளிடம் ஏற்படும் ஹெபடைடிஸ் தொற்று? தடுப்பது எப்படி?

Disclaimer

குறிச்சொற்கள்