Fri Sep 11, 2026 | 11:11 PM IST

Doctor Verified

High BP During Pregnancy: கர்ப்ப கால இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத வைத்தியங்கள் இதோ

How To Control High Blood Pressure During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் பல்வேறு உடல் மற்றும் மனம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் பலரும் அனுபவிக்கும் பிரச்சனைகளில் ஒன்று உயர் இரத்த அழுத்தம் ஆகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை பிரீக்ளாம்ப்சியா (Preeclampsia) என அழைக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு தலைவலி, மங்கலான பார்வை, மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பல்வேறு அறிகுறிகளைச் சந்திக்கலாம்.

இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆபத்தானதாகும். கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மருத்துவரின் பரிந்துரையில் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர, கர்ப்ப காலத்தில் உயர் இரத்தத்தைக் குறைக்க சில ஆயுர்வேத வைத்தியங்கள் உதவுகின்றன. இதில் கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத முறைகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் ரிது சாதா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Moringa Leaves During Pregnancy: கர்ப்பிணி பெண்களுக்கு முருங்கை இலை தரும் ஆரோக்கிய நன்மைகள்இதோ

கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் வழிகள்

பிராணாயாமம்

கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க யோகா மற்றும் பிராணாயாமம் மிகவும் நன்மை பயக்கும். தினமும் தொடர்ந்து யோகா செய்வது ஹார்மோன் அளவை சாதாரணமாக வைக்க உதவுகிறது. இந்த யோகா செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பிராணாயாமம் பயிற்சியை தினமும் 15 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இது உயர் இரத்த அழுத்தத்திற்கு நன்மை தருகிறது.

தேன்

கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தேன் உட்கொள்ளலாம். இதற்கு ஒரு கப் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் அளவு தேன் மற்றும் அரை டீஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது, உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதுடன் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

கல் உப்பு

மருத்துவர் ரிது சாதா அவர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சாதாரண உப்புக்குப் பதிலாக கல் உப்பை உட்கொள்ளலாம். கல் உப்பில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இவை இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைப்பதுடன், தசைகளை தளர்த்துகிறடு. கல் உப்பை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Juice During Pregnancy: கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாற்றை எப்போது குடிக்கலாம்?

இலவங்கப்பட்டை

ஆயுர்வேதத்தில் இலவங்கப்பட்டை மிகுந்த நன்மை பயக்கும் ஒன்றாகும். இது பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் துத்தநாகம், பொட்டாசியம், தயாமின், இரும்புச்சத்து, ரைபோஃப்ளேவின், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் நிறைந்த இலவங்கப்பட்டையை உட்கொள்வது கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதற்கு ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு வடிகட்டி சுவைக்காக தேன் சேர்த்து குடிக்கலாம்.

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை தரும் ஒன்றாகும். இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதுடன், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுவதன் மூலம் கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையைச் சந்திப்பவர்கள், இந்த ஆயுர்வேத நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனினும், எந்தவொரு புதிய முயற்சியையும் மேற்கொள்ளும் முன், சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Knee Pain During Pregnancy: கர்ப்ப காலத்தில் முழங்கால் வலியா? இந்த குறிப்புகளை ஃபாலோப் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Vaginal Hygiene in Pregnancy: கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய 5 பிறப்புறுப்பு தொற்றுகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content