Moringa Leaves During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பது அவசியமாகும். இந்த காலகட்டத்தில் பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் மூலம் உடல் பலவீனம் நீங்கி, இரத்தக் குறைபாடு ஈடு செய்யப்படுகிறது.
பொதுவாக இந்த காலகட்டத்தில் பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் பல நேரங்களில் பாதிக்கப்படுவர். இது பொதுவாக இரத்தசோகை என அழைக்கப்படுகிறது. இந்த இரும்புச்சத்து குறைபாடு காரணமாக பெண்கள் சோர்வு, பலவீனம் அல்லது ஹார்மோன் பிரச்சனைகளைச் சந்திப்பர். இந்த பிரச்சனையைக் குறைக்க முருங்கை இலை உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Beetroot Juice During Pregnancy: கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாற்றை எப்போது குடிக்கலாம்?
கர்ப்ப காலத்தில் முருங்கை இலை
கர்ப்பிணி பெண்கள் முருங்கை இலை அல்லது முருங்கை பொடியை எடுத்துக் கொள்ளலாம். இந்த இலைகளில் இரும்புச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, சி போன்றவை காணப்படுகிறது. இதனை உட்கொள்வது பலவீனத்தை நீங்குவதுடன், எலும்புகளை வலுவடைய வைக்கிறது. கர்ப்ப காலத்தில் முருங்கை இலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆயுர்வேத நிபுணர் பவன் சிங் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் முருங்கை இலை தரும் நன்மைகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் முருங்கை இலையை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு
கர்ப்பிணி பெண்கள் முருங்கை இலைகளை உட்கொள்வதன் மூலம் அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இதற்கு முருங்கை இலைகளில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்களே காரணமாகும். இவை வயிற்றை சுத்தப்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Tooth Decay Cavities In Children: உங்க குழந்தைக்கு பற்களில் சொத்தை ஏற்படுவதை தவிர்க்க இதை செய்யுங்க!
மன அழுத்தத்தைக் குறைக்க
கர்ப்பிணி பெண்கள் பலரும் மன அழுத்தத்தை உணர்கின்றனர். இந்த இலைகளை உட்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முருங்கை இலைகளை உட்கொள்வது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், மன தளர்வை அளிக்கிறது.
உடல் ஆற்றலை அதிகரிக்க
முருங்கை இலையில் இரும்புச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை உடலை வலுப்படுத்துவதுடன், இரும்புச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது. இவை உடலில் ஆற்றலை அதிகரித்து சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்குகிறது.
தாய்ப்பால் அதிகரிக்க
குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் முருங்கை இலைகளை உட்கொள்வதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் இது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு உதவுகிறது. முருங்கை இலையில் உள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது.
பலவீனத்தை நீக்க
கர்ப்ப காலத்தில் பெண்கள் முருங்கை இலையை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள பலவீனத்தை நீக்கலாம். இதனுடன் இதில் உள்ள அதிகளவிலான இரும்புச்சத்துக்கள் உடலின் பலவீனத்தை நீக்கி ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதில் முருங்கை இலைகள் மட்டுமல்லாமல் பொடியையும் உட்கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் முருங்கை இலைகள உட்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். எனினும், இதை உட்கொள்ளும் முன்னதாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Back Pain: கர்ப்ப காலத்தில் முதுகுவலியால் அவதியா.? சூப்பர் டிப்ஸ் இதோ..
Image Source: Freepik