Ways To Relieve Knee Pain During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்களில் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் சூழல் ஏற்படலாம். அந்த வகையில் பெண்கள் பலரும் கர்ப்ப காலத்தில் முழங்கால் வலி பிரச்சனையைச் சந்திக்கின்றனர். அதிலும் உடல் எடை அதிகரிப்பால் முழங்கால்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் தோன்ற ஆரம்பிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலி ஹார்மோன் மாற்றங்களாலும் ஏற்படலாம். கருவின் அளவு அதிகரிக்கும் போது, பெண்களின் உடல்நிலையில் மாறலாம். இது முழங்கால் வலியை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் முழங்கால் வலியைக் குறைக்க டெல்லியில் உள்ள ஹோலி குடும்ப மருத்துவமனையின் உணவியல் நிபுணர் சனா கில்லி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Beetroot Juice During Pregnancy: கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாற்றை எப்போது குடிக்கலாம்?
கர்ப்ப கால முழங்கால் வலி குறைய உதவும் உணவுக் குறிப்புகள்
அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த
கர்ப்ப காலத்தில் முழங்கால் வலி வலியைப் போக்க விரும்புபவர்கள், உணவில் அழற்சி எதிர்ப்பு உணவுகளைச் சேர்க்கலாம். இதற்கு புரதங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள் மற்றும் முழு தானியங்களைச் சேர்க்கலாம். பச்சை இலைக்காய்கறிகள், ஆலிவ் எண்ணெய், ஆரஞ்சு, ப்ளூபெர்ரி, ஆப்பிள், அக்ரூட் பருப்புகள், காலே, பாதாம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகள்
முழங்கால் வலியிலிருந்து விடுபட விரும்புபவர்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை சேர்த்துக் கொள்ளலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. முழங்கால் வலி மற்றும் வீக்கத்தைப் போக்க வெங்காயம், ஸ்ட்ராபெர்ரி, மற்றும் ஆப்பிள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் அதிகளவு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த கிட்னி பீன்ஸ், தக்காளி, பீட்ரூட், கொத்தமல்லி, மாதுளை, பூண்டு, இஞ்சி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கூடுதல் கலோரிகளைத் தவிர்ப்பது
கர்ப்ப காலத்தில் கூடுதல் கலோரிகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கர்ப்ப கால மூட்டு வலிக்கு முக்கிய காரணம் அதிக உடல் எடையே காரணமாகும். எனவே கர்ப்ப காலத்தில் எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் அதிக காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். இத்துடன் இனிப்புப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் சிலர் டீ குடிப்பதை விரும்புவர். எனினும் ஒரு நாளைக்கு 1 தேக்கரண்டி சர்க்கரைக்கு மேல் சாப்பிடக் கூடாது.
இந்த பதிவும் உதவலாம்: Moringa Leaves During Pregnancy: கர்ப்பிணி பெண்களுக்கு முருங்கை இலை தரும் ஆரோக்கிய நன்மைகள்இதோ
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது
கர்ப்ப காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் உடலில் வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கிறது. இதற்கு இதில் நிறைந்துள்ள அதிகளவிலான நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளே காரணமாகும். இது மூட்டு வலியை அதிகரிக்கலாம். முழங்கால் வலியைத் தவிர்க்க நீரேற்றமாக வைத்துக் கொள்ளலாம். உணவில் போதுமான அளவு நீரைத் தவிர, காய்கறி சாறு, எலுமிச்சைத் தண்ணீர், தேங்காய் தண்ணீர் போன்றவற்றைச் சேர்க்கலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு
கர்ப்ப கால உணவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைச் சேர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஒமேகா 3 கொழுப்பு அமில சம்ப்ளிமென்ட்ஸ்களைச் சேர்க்கலாம். மேலும் ஒமேகாவைத் தவிர, வைட்டமின் டி சப்ளிமென்ட்கள் மற்றும் கால்சியம் சத்துக்களை எடுத்துக் கொள்ளலாம். இது முழங்கால் வலியைப் போக்க உதவுகிறது. மேலும் இது ஒமேகா-3 இயற்கையான உணவுகளிலும் காணப்படுகிறது. அந்த வகையில், கர்ப்ப காலத்தில் ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆளி விதைகளைத் தயிருடன் கலந்து சாப்பிடலாம்.
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் முழங்கால் வலி பிரச்சனைக்கு உணவு முறையில் இந்த மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Back Pain: கர்ப்ப காலத்தில் முதுகுவலியால் அவதியா.? சூப்பர் டிப்ஸ் இதோ..
Image Source: Freepik