$
Causes Of Breathlessness And Joint Pain After Meals During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் பலரும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்கள் வாந்தி, வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற பல்வேறு அறிகுறிகளைச் சந்திக்கலாம். இந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் இந்த காலகட்டத்திலேயே புதிய தாய்மார்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
சில பெண்கள் உணவு உண்ட பிறகு செரிமான பிரச்சனைகளைச் சந்திப்பர். இன்னும் சிலருக்கு மூட்டு வலி ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்கள் சிலருக்கு உணவு உண்ட உடனேயே மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். கர்ப்ப காலத்தில் உணவு உண்ட பிறகு ஏற்படும் அறிகுறிகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் அதிக ஆபத்துள்ள கர்ப்ப நிபுணர், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர் பூமிகா பன்சால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் விளக்கியுள்ளார். இதில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம், மூட்டு வலி மற்றும் சாப்பிட்ட பிறகு மலம் கழிக்க தூண்டுவது ஏன் போன்றவை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Juice for Pregnancy: கர்ப்ப காலத்தில் தினமும் ஃப்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லதா? நிபுணர்கள் கூறுவது இங்கே!
கர்ப்ப காலத்தில் மூச்சுத்திணறல், மூட்டு வலி போன்றவை ஏற்படுவது ஏன்?
கர்ப்ப கால வீக்கம்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வீக்கத்தின் காரணமாக நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படும். இதனால், பெண்கள் ஊசி போன்ற வலி, கைகள் மற்றும் பிற மூட்டுகளில் வலி, உணர்வின்மை மற்றும் கைகளில் வலி போன்றவற்றை அனுபவிக்கலாம். இந்த சூழ்நிலையில், கர்ப்பிணி பெண்கள் எடையுள்ள பொருள்கள் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த சோகை
கர்ப்ப காலத்தில் இரத்த இழப்பு காரணமாக, கர்ப்பிணி பெண்கள் இரத்த சோகை ஏற்படும் அபாயம் ஏற்படலாம். இடு பெண்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் தீங்கு விளைவிக்கலாம். மேலும் ஹீமோகுளோபின் குறைபாடு ஆனது ஆக்ஸிஜன் அளவைப் பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில் பெண்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகலாம்.
புரோஜெஸ்ட்ரோன் அதிகரிப்பு
கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகமாவதால், அவர்கள் சுவாச பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் சுவாசத்தை வேகமாக்கலாம். இந்த சூழ்நிலையில் சோம்பல், நெஞ்சு வலி போன்ற உணர்வுகள் ஏற்பட்டால், அன்றாட வேலை செய்வதில் சிரமம் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Diet: மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் இதையெல்லாம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?
காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளக்ஸ்
கர்ப்பிணி பெண்கள் இரவில் அதிகம் சாப்பிடுவது, அவர்களுக்கு காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளக்ஸ் நோயால் பாதிக்கப்படலாம். இது அவர்களுக்கு அடிக்கடி மலம் கழிப்பதை ஊகுவிக்கிறது. எனவே, கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால், பெண்கள் எடை அதிகரிப்பினை சந்திக்கின்றனர். இந்த சூழ்நிலையில், பெண்கள் பல வகையான பிரச்சனைகளை சந்திக்கலாம். கர்ப்ப காலத்தில் காணப்படும் இந்த புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் எடை அதிகரிப்பானது கைகளின் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் இது ஒரு பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இது போன்ற அறிகுறிகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் அறிகுறிகளாகும். எனவே கர்ப்பத்தின் போது இந்த அறிகுறிகளைச் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Fetal Weight: கர்ப்ப காலத்தில் கருவின் எடையை அதிகரிப்பது எப்படி?
Image Source: Freepik