Tips To Relieve Back Pain During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியமாகும். சிறிது கவனக்குறைவு ஏற்பட்டால் கூட, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதில் ஒன்றாக, கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகுவலி ஆகும். கர்ப்பகாலத்தில் முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று எடை அதிகரிப்பு ஆகும். இது இடுப்பில் அழுத்தத்தை உண்டாக்கி, முதுகுவலியை ஏற்படுத்தும். மேலும் மூன்றாவது டிரைமெஸ்டருக்குப் பிறகு கரு கிட்டத்தட்ட முழுமையாக உருவாகும். இது வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி, கீழ் முதுகில் வலியை உண்டாக்கலாம்.
ஹார்மோன் மாற்றங்களால் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு முதுகுவலி உண்டாகலாம். கர்ப்பகாலத்தில் தசைகள் பலவீனமடைவதாலும் முதுகுவலி ஏற்படும். இது தவிர, உடற்பயிற்சி செய்யாத பெண்களுக்கு முதுகில் அதிக வலி ஏற்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலியை சில ஆயுர்வேத மூலிகைகள் குணப்படுத்தலாம். இதில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுவலியை நீக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் குறித்து லக்னோவின் விகாஸ் நகரில் உள்ள ப்ராஞ்சல் ஆயுர்வேதிக் கிளினிக்கின் டாக்டர் மணீஷ் சிங் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த குளிருல தாங்க முடியாத மூட்டு வலியா? இந்த ஒரு ஆயுர்வேத வைத்தியம் போதும்.
கர்ப்ப கால முதுகு வலியை விரட்டும் ஆயுர்வேத மூலிகைகள்
ஆயுர்வேதத்தில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலியைக் குணப்படுத்த சில மூலிகைகளி உதவுகின்றன. அவற்றைப் பற்றி இதில் காண்போம்.
மஞ்சள் மற்றும் கிராம்பு
மஞ்சள், கிராம்புகளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை இரண்டையும் எடுத்துக் கொள்வது முதுகு வலியில் இருந்து நிவாரணம் தரும். அதன் படி, மஞ்சள் மற்றும் கிராம்பு இரண்டையும் பாலுடன் கலந்து சாப்பிடலாம். கிராம்புகளை அரைத்து, மஞ்சள் தூளுடன் கலந்து வைத்துக் கொள்ளலம். வெதுவெதுப்பான நீரில் இந்த கலவையை 1 ஸ்பூன் சேர்த்து இரவு தூங்கும் முன் குடித்து வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
பிப்பலி
இது ஒரு இயற்கை ஆயுர்வேத மருந்தாகும். இது வலியைக் குறைப்பதற்காகப் பயன்படுகிறது. பிப்பலி பொடி சந்தையில் விற்கப்படுகிறது. இதனை தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து பருகலாம். மேலும் இது பல அத்தியாவசிய எண்ணெய்களைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. அதன் படி, வேப்ப எண்ணெயுடன் பிப்பலி கலந்து மசாஜ் செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம்.
யூகலிப்டஸ் இலைகள்
யூகலிப்டஸ் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை வலியைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. தசைகள் மற்றும் எலும்புகளில் உள்ள வலியைப் போக்குவதற்கு யூகலிப்டஸ் இலைகள் சிறந்த தேர்வாகும். யூகலிப்டஸ் இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, இதை வலி உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் விரைவில் நிவாரணம் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ashwagandha For Stress: அஸ்வகந்தாவை இப்படி சாப்பிடுங்க. ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போய்டும்.
குக்குலு
இவை வலியைக் குறைக்க உதவும் சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். அதன் படி, கீல்வாதத்தால் ஏற்படும் வலிக்கு சிகிச்சையளிக்க குக்குலு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஒரு ஸ்பூன் குக்குலு பொடியை ஒரு கப் தண்ணீரில் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பின் தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம். இது முதுகு வலியிலிருந்து நிவாரணம் தரும்.
இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை
இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை கலவையை உட்கொள்வதன் மூலம் முதுகு வலியைக் குணமாக்கலாம். இவை இரண்டையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த சாற்றைத் தண்ணீரில் கலக்கும் போது வடிகட்டி எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து அருந்தலாம்.
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பகாலத்தில் இந்த மூலிகைகளின் வழக்கமான அல்லது அதிகப்படியான நுகர்வு தீங்கு விளைவிக்கலாம். எனவே, குறைந்த அளவு மட்டும் பயன்படுத்துவது நல்லது. மேலும் இந்த மூலிகைகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Black Raisin Benefits: சரும பிரச்சனை முதல் மலச்சிக்கல் பிரச்சனை வரை. பெண்களுக்கு இது ஒன்னு போதும்
Image Source: Freepik