$
Ayurvedic Treatment For Child Stomach Pain: குழந்தைகளுக்கு அஜீரணம், வாயுத்தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வயிற்று வலி ஏற்படலாம். இதிலிருந்து நிவாரணம் அளிக்க சில ஆயுர்வேத வைத்தியங்கள் உதவுகின்றன.
குழந்தைகளுக்கு வயிற்று வலி
குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்களில் வயிற்றுவலி பிரச்சனையும் ஒன்று. இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்குமே அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனினும், இந்த வயிற்றுவலியை சில ஆயுர்வேத வைத்தியங்களைக் கொண்டு கையாளலாம். முதலில் வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கான காரணங்கள்
குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதிகம் சாப்பிடுவது, செரிமானம் அடையாமல் இருப்பது, வாயுப் பிரச்சனை, தொற்று, மலம் கழிப்பதில் சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் வயிற்று வலியால் அவதிப்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Child Asthma Treatment: குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை நிர்வகிப்பது எப்படி?
வயிற்று வலியை நீக்க ஆயுர்வேத வைத்தியம்
குழந்தைகள் அனுபவிக்கும் வயிற்று வலியில் இருந்து விடுபட நீங்கள் பின்பற்ற வேண்டிய சில ஆயுர்வேத வைத்தியங்களைக் காணலாம்.
பெருங்காயம்
பெருங்காயத்தில் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் நிறைந்துள்ளது. இது வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழந்தையின் தொப்புள் பகுதியில் தடவி வர, அசௌகரியத்தைப் போக்கலாம்.

ஓமம் தண்ணீர்
அஜ்வைன் அல்லது ஓமத்தில் உள்ள கார்மினேடிவ் பண்புகள், வாயு அல்லது அஜீரணத்தை போக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் ஓமத்தை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஆறவிட வேண்டும். வயிற்று வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இந்த நீரைக் கொடுக்கலாம்.
பெருஞ்சீரக விதைகள்
வயிற்று வலி நிவாரணத்திற்கு சிறந்த ஆயுர்வேத மூலப்பொருள் பெருஞ்சீரக விதைகள் ஆகும். இது செரிமானம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை வறுத்து, குளிர்விக்க வேண்டும். பின் சிறிது நசுக்கி, சிறிது வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழந்தைக்கு ஒரு சிட்டிகை அளவு கொடுக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Juvenile Arthritis Symptoms: குழந்தைகளைப் பாதிக்கும் இளம் மூட்டுவலியின் முக்கிய அறிகுறிகள்
இஞ்சி, தேன் கலவை
வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை நீக்க இது சிறந்த கலவையாகும். இஞ்சியில் உள்ள செரிமான பண்புகள் வயிற்று வலியை நீக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் தேனுடன், அரை டீஸ்பூன் அளவு இஞ்சி சாறு சேர்த்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இது இயற்கையான மற்றும் சிறந்த தீர்வாகும்.

திரிபலா
இது ஆயுர்வேதத்தின் சிறந்த மூலிகைக் கலவையாகும். செரிமானத்திற்கு பெரிதும் உதவக்கூடியது. எனினும் குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவைத் தீர்மானிக்க, ஆயுர்வேத பயிற்சியாளர் அல்லது குழந்தை மருத்துவரை அணுக வேண்டும். இது செரிமானத்தை எளிதாக்குவதுடன், வயிற்று அசௌகரியத்தைத் தடுக்கிறது.
புதினா இலைகள்
புதினா இலைகள் குளிர்ச்சி மற்றும் இனிமையான பண்புகளைக் கொண்டது. இது வயிற்று அசௌகரியத்தை எளிதாக்குகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியைக் குணமாக்க சில புதினா இலைகளை நசுக்கி ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து அருந்தச் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn immunity: பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது?
ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
இந்த ஆயுர்வேத முறைகளுடன், ஆரோக்கிய உணவு முறையும் கையாளப்பட வேண்டும். இது பிள்ளையை சீரான இடைவெளியில் சாப்பிட ஊக்குவிக்கிறது. எனவே குழந்தைகளை சூடான மற்றும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டும். அதே சமயம், அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், வயிற்று வலியைத் தடுக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஆயுர்வேத வைத்தியம் நிவாரணம் அளிக்கும் அதே சமயம், ஒவ்வொரு குழந்தையின் உடலமைப்பும் தனித்துவமானதாகும். எனவே குழந்தைகளுக்கு வயிற்று வலி தொடர்ந்தாலோ அல்லது காய்ச்சல், வாந்தி, அல்லது பிற அறிகுறிகளுடன் காணப்படால் சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு குழந்தை மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் குழந்தைக்கு ஒவ்வாமை அல்லது பிற மருத்துவ நிலைமைகள் ஏதேனும் இருந்தால், எந்தவொரு புதிய முயற்சியையும் மேற்கொள்ளும் முன் சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Food Allergy: குழந்தைக்கு உணவில் ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
Image Source: Freepik