Symptoms of Juvenile Arthritis: பொதுவாக மூட்டு வலி என்பது முதுமையில் ஏற்படும் மூட்டு தொடர்பான நிலையைக் குறிப்பதாகும். ஆனால் இளம் வயதினரும் மூட்டு வலியால் பாதிக்கப்படுவர். குறிப்பாக, குழந்தைகளுக்கு இடுப்பு, முழங்கால், மணிக்கட்டு போன்றவற்றில் வலி ஏற்படும். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தாமதாக நோயறிதல் மற்றும் சிகிச்சையில் தாமதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் மூட்டுவலி இளம் மூட்டு வலி எனப்படுகிறது. இந்த இளம் மூட்டு வலிக்கு சரியான காரணங்கள் தெரியாவிட்டாலும், குழந்தைகளில் சில அறிகுறிகளைக் காண முடியும். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
இளம் மூட்டுவலியின் முக்கிய அறிகுறிகள்
குழந்தைகளுக்கு ஏற்படும் இளம் மூட்டுவலியின் முக்கிய அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
காலையில் விறைப்புத் தன்மை
குழந்தை விறைப்புத் தன்மையை அனுபவித்தால் அது இளம் மூட்டுவலியின் அறிகுறியை உணர்த்துகிறது. அதிலும் குறிப்பாக, காலையில் அல்லது நீண்ட நேரம் செயலற்ற பிறகு இந்த விறைப்புத் தன்மையை உணர்வர். இந்த விறைப்புத் தன்மை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும். இந்த விறைப்புத் தன்மையை இயக்கம் மற்றும் செயல்பாட்டின் மூலமாக மேம்படுத்த முடியும்.
சோர்வு உண்டாகுதல்
மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், போதுமான ஓய்வுக்குப் பிறகும் அடிக்கடி சோர்வு உணர்வை அனுபவிக்கின்றனர். மேலும், இந்த தொடர்ச்சியான அசௌகரிய நிலை, வலி எரிச்சல் உள்ளிட்டவை குழந்தையின் மனநிலையைப் பாதிப்பதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Food Allergy: குழந்தைக்கு உணவில் ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
மூட்டுவலி மற்றும் வீக்கம் உண்டாகுதல்
குழந்தைகளுக்கு தொடர்ந்து மூட்டுவலி மற்றும் வீக்கம் ஏற்படுவது இளம் மூட்டுவலியின் பொதுவான அறிகுறிகளாகும். இதில் குழந்தைகளுக்கு ஒன்று அல்லது பல மூட்டுப்பகுதிகளில் அசௌகரியங்கள் ஏற்படுதல், விறைப்புத் தன்மை உண்டாகுதல் போன்றவற்றை உணர்வர். இது நாள் முழுவதும் அவர்களை தீவிரத்தன்மையை ஏற்படுத்தும். இதில் பாதிக்கப்பட்ட இடங்கள் சிவப்பாகத் தோன்றுவதுடன், தொடுவதற்கு சூடாக இருப்பதை உணர்வர்.
தசை பலவீனம்
இளம் மூட்டுவலியைக் கவனிக்கப்படாத போது, நோய் முன்னேறி குழந்தைகள் செயல்களில் ஈடுபடுவதை அல்லது வழக்கமான விளையாட்டில் ஈடுபடுவதைக் குறைக்கும். குழந்தைகள் பாதிக்கப்பட்ட மூட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். இந்த குறைந்த இயக்கம், தசை பலவீனத்திற்கு வழிவகுக்கும்.
எப்போது மருத்துவரை நாட வேண்டும்?
இந்த அறிகுறிகளை குழந்தைகளுக்கு பல வாரங்கள் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். இந்த இளம் மூட்டுவலியை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிப்பதன் மூலம் மூட்டு சேதமடைவதை தடுக்க முடியும். இந்த மூட்டு வலியைக் கண்டறிந்து நிர்வகிக்கக் கூடிய நிபுணர், குழந்தை வாத நோய் நிபுணர் ஆவார். இவர்கள் முழுமையான மதிப்பீட்டை நடத்தி, சிகிச்சைக்கு தேவைப்பட்டால் இரத்தப் பரிசோதனை, இமேஜிங் சோதனை போன்றவற்றைப் பயன்படுத்தி சோதனை செய்வர். இளம் மூட்டுவலியை சரியான கவனிப்பு மற்றும் ஆதரவுடன் செயல்பட்டு நீக்குவதுடன் குழந்தைகள் நிறைவான வாழ்க்கையைப் பெற முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn immunity: பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது?
Image Source: Freepik