Childhood Asthma: குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட காரணம் என்ன? சரிசெய்வது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Childhood Asthma: குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட காரணம் என்ன? சரிசெய்வது எப்படி?

பல குழந்தைகளுக்கு ஆஸ்துமா என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கான ஏராளமான காரணங்கள் உள்ளன. குழந்தைப் பருவ ஆஸ்துமா நோய் குறித்து சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை மூத்த குழந்தை மருத்துவர் மற்றும் குழந்தை நுரையீரல் நிபுணர் டாக்டர் ஹரிஷ் வி.எஸ், கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

இதையும் படிங்க: உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…

குழந்தை பருவ ஆஸ்துமா

இந்தியாவில் குழந்தைகளிடையே காணப்படும் பொதுவான நிலை ஆஸ்துமா ஆகும். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா என்பது கட்டுப்படுத்தக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் நுரையீரலில் உள்ள சிறிய சுவாசக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பே ஆஸ்துமா பிரச்சனையாக அமைகிறது.

அதாவது நுரையீரலுக்கு உள்ளே மற்றும் வெளியே காற்றைக் கொண்டு செல்லும் காற்றுப் பாதைகள் சுருங்குகிறது. இவையே மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு காரணமாகிறது. ஆஸ்துமாவினால் குழந்தைகளுக்கு இருமல், சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், சில சமயங்களில் வயிற்று வலி போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவிற்கான காரணங்கள்

தொற்று நோய்கள்:

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஆஸ்துமா அடிக்கடி பாதிக்க முக்கிய காரணமாக வைரஸ் நோய்கள் இருக்கிறது. ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெரிய வயது குழந்தைகள், பெரியவர்கள் போன்றோருக்கு புகையிலை, இரசாயனங்கள் நிறைந்த பானங்கள், சில குளிர்ச்சி பொருட்கள், ஒவ்வாமை போன்ற எரிச்சலூட்டும் பொருள்கள், தூசிகள் போன்ற காரணங்களால் ஆஸ்துமா ஏற்படுகிறது.

குழந்தையின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அரிக்கும் தோலழற்சி அல்லது ஆஸ்துமா இருப்பின், குழந்தைக்கும் ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

மூச்சுத்திணறல்

மேலே கூறப்பட்ட சில காரணங்களால் காற்று செல்லக் கூடிய சிறிய சுவாசப்பாதைகளில் அடைப்பு ஏற்பட்டு ஆஸ்துமா உள்ள ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இது அதிக ஒலியை ஏற்படுத்துவதாக அமையும். ஆஸ்துமா உள்ள குழந்தைகளில் காற்றுப்பாதையில் சுருக்கம் ஏற்படின், காற்று மிகவும் சிரமத்துடன் நுரையீரலுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்கிறது. இந்த குறுகிய காற்றுப் பாதை குழாய்களிலேயே அதிக சளி உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆஸ்துமா உள்ள குழந்தைகள்

ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் வயதாகும் போது இந்த பிரச்சனையும் மேம்படுகிறது. ஆஸ்துமா லேசானதாக இருப்பின், சரியான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கான ஆஸ்துமாவைச் சரி செய்யலாம். ஒவ்வாமை ஆஸ்துமாவாக இருப்பின், குழந்தை வயதாகும் போது சரியாவதற்கான வாய்ப்பு குறைவாகும்.

குழந்தை பருவ ஆஸ்துமாவை சரி செய்வது எப்படி?

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கான மருந்துகளை சரியாக உட்கொண்டு, வழக்கமான மருத்துவ சோதனைகளில் கலந்து கொள்வதன் மூலம் இயல்பான வாழ்க்கையைப் பெறலாம். மேலும், ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவும் இன்ஹேலர்களை குழந்தையிடம் எப்போதும் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது பெற்றோர்கள் கடமை.

இதையும் படிங்க: Frequent Cold and Cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!

ஆஸ்துமா மட்டுமல்ல எந்தவொரு பிரச்சனையையும் சரியாக நடவடிக்கை மேற்கொண்டால் அதை சரிசெய்யலாம். பொதுவாக குழந்தைகள் விஷயத்தில் சமரசம் என்பதே வேண்டாம். குழந்தைகள் ஏதேனும் தீவிரத்தை உணரும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Image Source: FreePik

Read Next

Winter Care Tips: குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளை பாதுகாக்க இதை செய்யுங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்