Sunlight Benefits: தினமும் 20 நிமிடங்கள் வெயிலில் நின்றால்… உடலுக்கு இவ்வளவு நல்லதா?

  • SHARE
  • FOLLOW
Sunlight Benefits: தினமும் 20 நிமிடங்கள் வெயிலில் நின்றால்… உடலுக்கு இவ்வளவு நல்லதா?

இப்படி வெயிலில் பொழுதைக் கழிப்பதால் உடலுக்கு என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்துகொள்ளுங்கள்…

வெயிலை கண்ணில் பார்க்காதவர்கள் அடிக்கடி மருத்துவரை பார்க்க வேண்டி வரும் எனக்கூறுவார்கள். ஏனெனில் சூரியனிடம் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி என்ற அரிய சத்து, உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு தேவைப்படுகிறது. அது இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும்.

சூரிய ஒளியில் இருந்து நமது உடலுக்கு அதிக வைட்டமின் டி கிடைக்கிறது. மேலும் அதிகாலை சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிடுவது உங்கள் மனநிலையை மேம்படுத்துவதோடு, மகிழ்ச்சியான செரோடோனின் என்ற ஹார்மோனை வெளியிட உதவுகிறது.

எழுந்த பிறகும் நம்மால் புத்துணர்ச்சியை உணர முடியாது. அதிகாலை சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது இந்த பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். இது மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

இவ்வாறு சூரிய ஒளியில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு சரும புற்றுநோய், கருமை, சருமம் சிவந்து போதல், முகப்பரு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். எனவே அதிகாலை அல்லது சாயங்கால வேளையில் தினமும் 20 நிமிடத்திற்கு சூரிய ஒளி படும்படியான ஆக்டிவிட்டிகளை செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

சூரிய ஒளி நேரடியாக உடலுக்கு வைட்டமின் D ஐ வழங்குகிறது, மேலும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் இப்போது என்ன பலன்கள், எவ்வளவு நேரம் சூரிய ஒளியில் இருப்பது நல்லது போன்றவற்றை அறிந்து கொள்வோம்.

இயற்கையான வைட்டமின் டி:

வைட்டமின் டி நம் உடலுக்கு இன்றியமையாதது. இது உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது, செல் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் வடிவில் கிடைத்தாலும், அது போதுமானதாக இருக்காது.

ஆனால் சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகவே வைட்டமின் டி பெறலாம். வாரத்தில் சில நாட்கள் வெயிலில் 5 முதல் 20 நிமிடங்கள் வரை உங்கள் உடலுக்கு போதுமான வைட்டமின் டி கிடைக்கும்.

எலும்பை இரும்பாக்கும்:

உடலில் வைட்டமின் டி குறைவினால் எலும்புகள் மெலிந்து, உடையக்கூடியவையாக மாறக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இதனால் எலும்புகளின் வடிவமும் மாறலாம். குறிப்பாக வைட்டமின் டி குறைபாடு, சிறு குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

உடலில் கால்சியம் அளவை பராமரிக்க இந்த வைட்டமின் டி அவசியம், இது எலும்பு உருவாவதற்கு அவசியம். எனவே தினமும் 20 நிமிடம் சூரிய ஒளியில் இருப்பதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும், சூரிய ஒளி எலும்புகளை வலுவாக வைத்திருக்கும்.

மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகிறது:

நீங்கள் சூடான வெயிலில் இருக்கும்போது உங்கள் உடல் ஒருவித சுகத்தை உணரும். இந்த நேரத்தில் உங்கள் உடல் செரோடோனின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது, இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. அது உங்களை மனச்சோர்விலிருந்து வெளியே கொண்டு வரும். நிம்மதியாக ஓய்வெடுக்க உங்களை ஊக்குவிக்கிறது.

நீரிழிவு நோய் தடுப்பு:

ஒவ்வொரு நாளும் வெயிலில் சிறிது நேரம் செலவிடுவது நீரிழிவு நோயைத் தடுக்க மலிவான மற்றும் எளிதான வழி என்று கூறப்படுகிறது.

சூரிய ஒளியில் இருந்து வரும் வைட்டமின் டி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் இன்சுலின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல ஆய்வுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. மற்ற ஆய்வுகள் சூரிய ஒளி எடை குறைப்பதில் பங்கு வகிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

நீண்ட காலம் வாழ வேண்டுமா?

ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சூரியனில் அதிக நேரம் செலவிடாதவர்களை விட அதிக நேரம் சூரியனில் இருப்பவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் ஆயுட்காலம் சில மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image Source: Freepik

Read Next

Seeds For Blood Sugar: இந்த விதைகளை சாப்பிட்டாலே போதும். சர்க்கரை அளவு டக்குனு குறைஞ்சிடும்

Disclaimer

குறிச்சொற்கள்