Doctor Verified

Seeds For Blood Sugar: இந்த விதைகளை சாப்பிட்டாலே போதும். சர்க்கரை அளவு டக்குனு குறைஞ்சிடும்

  • SHARE
  • FOLLOW
Seeds For Blood Sugar: இந்த விதைகளை சாப்பிட்டாலே போதும். சர்க்கரை அளவு டக்குனு குறைஞ்சிடும்

இது தவிர, தினசரி உணவில் சில விதைகளைச் சேர்த்துக் கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய விதைகள் குறித்து, ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Ginger For Digestion: நிறைய சாப்பிட்டு ஜீரணம் ஆகலயா.? இஞ்சியை இப்படி எடுத்துக்கோங்க.

சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும் விதைகள்

நைஜெல்லா விதைகள்

இது பொதுவாக வீடுகளில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதைகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தவை ஆகும். இது கருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஆல்பா-லிபோயிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் அளவைப் பராமரிக்கவும் உதவுகிறது. நைஜெல்லா விதைகளைப் பல்வேறு வழிகளில் உட்கொள்ளலாம்.

சூரியகாந்தி விதைகள்

இதில் ஆல்பா லிபோயிக் அமிலம், வைட்டமின் ஈ போன்றவை உள்ளது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இதில் உள்ள கனிமங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

பூசணி விதைகள்

பூசணி விதைகள் மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். தினந்தோறும் பூசணி விதைகளை சாப்பிடுவது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது தவிர, பூசணி விதைகளை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Ulcer Treatment: வாய்ப்புண்களால் அவதியா? சீக்கிரம் சரியாக இந்த 4 பொருள் போதும்.

வெந்தய விதைகள்

இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் விதையாகும். இதில் பொட்டாசியம், நார்சத்துக்கள், வைட்டமின் கே, மற்றும் சி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெந்தய விதைகளை உட்கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஊட்டச்சத்துக்கள் ஆற்றல் கூடம் எனவும் அழைக்கப்படுகிறது.

எள் விதைகள்

குளிர்காலத்தில் எள் விதைகள் மிகவும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்துக்கள், மக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையும், இந்த விதைகளை உட்கொள்வது குளிர்காலத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். எனினும், எந்தவொரு நோய்க்கும் சிகிச்சை பெறுபவர்கள் புதிதாக விதைகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் பூசணி விதை தரும் நன்மைகள்.!

Image Source: Freepik

Read Next

Masala Tea: மசாலா டீ பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… ஒரு கப்பில் எத்தனை நன்மைகள் பாருங்க!

Disclaimer

குறிச்சொற்கள்