Doctor Verified

Black Raisin Benefits: சரும பிரச்சனை முதல் மலச்சிக்கல் பிரச்சனை வரை. பெண்களுக்கு இது ஒன்னு போதும்

  • SHARE
  • FOLLOW
Black Raisin Benefits: சரும பிரச்சனை முதல் மலச்சிக்கல் பிரச்சனை வரை. பெண்களுக்கு இது ஒன்னு போதும்

பெண்கள் சந்திக்கும் இந்த வகை பிரச்சனைகளில் இருந்து விடுபட, கருப்பு திராட்சை பெரிதும் பயன் தரும். பெண்கள் கருப்பு திராட்சை தண்ணீரைக் குடித்து வந்தால், உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன், சருமம் மற்றும் முடிக்கு நன்மை தருவதாகவும் அமைகிறது. பெண்கள் கருப்பு திராட்சை தண்ணீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த குளிருல தாங்க முடியாத மூட்டு வலியா? இந்த ஒரு ஆயுர்வேத வைத்தியம் போதும்.

கருப்பு திராட்சை ஊட்டச்சத்து மதிப்பு

கருப்பு திராட்சையில் நல்ல அளவிலான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும், இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதில் வைட்டமின் கே, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உற்சாகமாக வைக்க உதவுகிறது.

பெண்களுக்கு கருப்பு திராட்சை தரும் நன்மைகள் (Health Benefits Of Black Raisins Water)

பெண்கள் கருப்பு திராட்சைகளை உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

சரும மேம்பாட்டிற்கு

பெண்கள் தங்களது சருமத்தை மேம்படுத்த பல வழிகளில் முயற்சிக்கின்றனர். சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த அழகுசாதனப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை இரசாயனம் கலந்ததாகவும், பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அமையலாம். சருமத்தை ஆழமாக பாதுகாப்பதற்கு கருப்பு திராட்சை பயனுள்ளதாக அமையும். கருப்பு திராட்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.

எலும்பு வலிமைக்கு

கருப்பு திராட்சையில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் வலிமைக்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள தாதுக்கள் கால்சியத்தை உறிஞ்ச உதவுகின்றன. இதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Ashwagandha For Stress: அஸ்வகந்தாவை இப்படி சாப்பிடுங்க. ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போய்டும்.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு

கர்ப்ப காலத்தில், கர்ப்பிணி பெண்கள் பலரும் அனுபவிக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக மலச்சிக்கல் உள்ளது. இந்த சூழ்நிலையில், கருப்பு திராட்சையை தண்ணீர் ஊறவைத்து, காலையில் இந்த தண்ணீருடன் திராட்சையைச் சாப்பிடுவதன் மூலம் கர்ப்ப கால மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

கருப்பு திராட்சை தண்ணீர் குடிப்பது எப்படி? (How To Drink Black Raisin Water)

  • முதலில் கருப்பு திராட்சை நல்ல தரமானதாக சந்தையில் வாங்கிக் கொள்ளலாம்.
  • பின் 7-8 கருப்பு திராட்சையை ஒரு முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம்.
  • பின்னர் 1 கிளாஸ் நீரில் இரவு முழுவதும் கருப்பு திராட்சையை ஊற வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில் இந்த ஊறவைத்த கருப்பு திராட்சை தண்ணீரை அருந்தி விட்டு, திராட்சையையும் உட்கொள்ளலாம்.

இவ்வாறு கருப்பு திராட்சை தண்ணீரைக் குடித்து வர பெண்கள் பல்வேறு வகையான நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Reverse Prediabetes: இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதும்… ப்ரீ டயாபெடிஸ் ரிவர்ஸ் ஆகும்!

Image Source: Freepik

Read Next

Ghee: மழைக்காலத்தில் தினமும் நெய் சாப்பிட்டால்… இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Disclaimer

குறிச்சொற்கள்