Weight Loss Grapes என்ன சாப்பிட்டாலும் வெயிட் குறையலயா? உலர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Weight Loss Grapes என்ன சாப்பிட்டாலும் வெயிட் குறையலயா? உலர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க


உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு உலர் திராட்சை மிகவும் பயனுள்ளதாக அமையும். எனினும் எடை இழப்புக்கு உலர் திராட்சையை எடுத்துக் கொள்ளும் முன் ஒவ்வொரு நாளும் எத்தனை திராட்சைகளை உட்கொள்வது மற்றும் அவற்றை உணவில் எவ்வாறு சேர்த்துக்கொள்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைக்க திராட்சை உட்கொள்ளும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sabja Seeds: மடமடனு எடை குறையணுமா? சப்ஜா விதைகளை இப்படி சாப்பிடுங்க

எடை இழப்புக்கு உலர் திராட்சை தரும் நன்மைகள்

செரிமான மேம்பாட்டிற்கு

உடல் எடையை குறைக்க முடியாத பெரும்பாலானோர்க்கு பிரச்சனையாக அமைவது வளர்ச்சிதை மாற்ற விகிதமே ஆகும். சரியான வளர்ச்சிதை மாற்றம் இல்லாத போது அல்லது செரிமான பிரச்சனை உள்ள போது கொழுப்பு படிவு ஏற்படுகிறது. மேலும், செரிமானம் அடையாமல் போகும் எந்த உணவும் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது அல்லது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் திராட்சை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். உலர் திராட்சையில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை உடலில் இருந்து நச்சுகள் அல்லது தேவையற்ற மற்றும் செரிக்கப்படாத உணவுகளை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. உலர் திராட்சை உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

ஆற்றல் மட்டத்தை மேம்படுத்த

உடல் எடை குறைய முயற்சிப்பவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால் உடல் சோர்வடைய வாய்ப்புண்டு. திராட்சைகள் ஆற்றல் மிக்கதாகவும், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகளைக் கொண்டிருப்பதாகவும் அமைகிறது. இவை நல்ல பயிற்சிக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. திராட்சை உட்கொள்வது உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளையும் நீக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Metabolism Increasing Tips: மெட்டபாலிசத்தை இப்படி அதிகரிச்சா, எடையை ஈஸியா குறைக்கலாம்

பசி கட்டுப்பாட்டிற்கு

எடை இழப்பை தாமதமாக்கும் காரணிகளில் ஒன்றாக அமைவது பசி ஆகும். உணவில் உள்ள கலோரிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பது பசியின்மையை இயற்கையாக நிகழ்கிறது. பெரும்பாலும், கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் பசி அதிகரித்து, எடை இழப்பைத் தோற்கடிக்கிறது.

பசியைப் பொறுத்தமட்டில், திராட்சையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும். திராட்சையில் உள்ள லெப்டின் உள்ளடக்கம் பசியை அடக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இது உடலில் உள்ள தெர்மோஜெனீசிஸை மேம்படுத்தி, கொழுப்பு செல்களை வேகமாக அழிக்கிறது. இது உடலில் உள்ள தெர்மோஜெனீசிஸை மேம்படுத்தி, கொழுப்பு செல்களை வேகமாக அழிக்க உதவுகிறது. எடை இழப்பில் திராட்சை மிகவும் நன்மை பயக்கும்.

உடல் எடை குறைய திராட்சை உட்கொள்ளும் முறை

  • தினந்தோறும் இரவில் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து திராட்சையையும் உட்கொள்ள வேண்டும். இந்த முறை திராட்சையை பச்சையாக சாப்பிடுவதை விட சிறந்ததாகும். ஊறவைத்த திராட்சையை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • சாலட்களாக எடுத்துக் கொள்ளும் போது கசப்பு மற்றும் இனிப்பு சுவையை மேம்படுத்த திராட்சைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சிறிது திராட்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், திராட்சை தண்ணீரை உட்கொள்ள வேண்டும். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் உடலை நீரேற்றமாக உதவுகிறது.
  • தினமும் காலையில் காலை உணவுடன் சில திராட்சைகளை உட்கொள்வது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
  • திராட்சை இனிப்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தைத் தருகிறது. எடை இழப்புக்கு திராட்சை சிறந்த தேர்வாகும்.

இவ்வாறு திராட்சையை பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Fruits: இந்த சம்மர்ல வேகமாக எடையை குறைக்கணுமா? இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்

Image Source: Freepik

Read Next

Obesity Management: டீ, காபி குடிச்சா உடல் பருமன் குறையுமா.? அது எப்படி.?

Disclaimer