Black Grapes: நம்மில் பெரும்பாலானோருக்கு இனிப்பு, புளிப்பு மற்றும் ஜூசி பழங்களை சாப்பிட பிடிக்கும். இவை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானதாக இருக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் பல்வேறு சுகை மிகுந்த பொருட்களை தேடித்தேடி சாப்பிடுவோம். குளிர்காலத்தில் தினமும் திராட்சை சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் சிலர் பச்சை திராட்சையை விட கருப்பு திராட்சையை சாப்பிடுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
காரணம் பச்சை திராட்சையை விட கருப்பு திராட்சை தான் உடலுக்கு அதிக நன்மை பயக்கும். கருப்பு திராட்சையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, சி, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நல்ல அளவில் உள்ளன. இது தவிர, கருப்பு திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன.
ஆனால் சில சமயங்களில் கருப்பு திராட்சையை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்த தகவலை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
முதலில் கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வோம்
- கருப்பு திராட்சை சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
- இவை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
- இவற்றை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
- இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
- இதய நோய் அபாயத்தைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
- எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
- வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
கருப்பு திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

பொதுவாக, கருப்பு திராட்சை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு முற்றிலும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் அவற்றை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. குறைந்த அளவில் அவற்றை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தினமும் 200-250 கிராமுக்கு மேல் கருப்பு திராட்சை சாப்பிட்டு வந்தால், சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
அதே சமயம் கருப்பு திராட்சையை ஒவ்வாமை உள்ளவர்கள் உட்கொண்டால், தோல் அரிப்பு, சொறி மற்றும் பல வகையான அலர்ஜிகளை சந்திக்க நேரிடும். கருப்பு திராட்சை அதிகமாக சாப்பிடுவதால், சிலருக்கு இருமல், வாய் வறட்சி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எனவே எதையும் அளவாக உட்கொண்டால் உணவே மருந்து என வாழலாம்.
Image Source: FreePik