$
Benefits Of Eating Muskmelon In Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருப்பது அவசியம் ஆகும். குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள வேண்டும். ஏனெனில், தவறான உணவுப் பழக்கங்களால் தாய் மற்றும் சேய் இருவரும் பாதிப்படையலாம்.
அந்த வகையில் கர்ப்ப காலத்தில் முலாம்பழம் சாப்பிடுவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை கர்ப்பிணிகளின் உடலில் நிலையான மாற்றங்களுக்கு உதவும் வகையிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் முலாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Foods In Pregnancy: கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவு குறைய நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்
முலாம்பழத்தின் ஊட்டச்சத்துக்கள்
முலாம்பழத்தில் பல்வேறு முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன. இதனுடன் வைட்டமின் பி9 என்ற ஃபோலிக் அமிலம் அதிகளவு உள்ளது. இவை கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும்.
இவை கருவின் ஆரோக்கியமான திசுக்களின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முலாம்பழங்களில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இரத்தம் உறைவதைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

கர்ப்பிணிகள் முலாம்பழம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
கர்ப்ப காலத்தில் முலாம்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மையைத் தருகிறது.
இரத்த சோகையைத் தவிர்க்க
கர்ப்ப காலத்தில் இரத்த சோகை இருப்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவை இரத்த சோகையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வைட்டமின் சி சத்துக்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
இரத்தம் உறைவதைத் தடுக்க
கர்ப்ப காலத்தில் இரத்தம் உறைதல் பிரச்சனை இன்று பலரும் சந்திக்கக் கூடியதாகும். இவை மிகவும் அரிதானது எனினும், முலாம்பழத்தை எடுத்துக் கொள்வது இரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Fennel Water During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் சீரகத் தண்ணீர் குடிக்கலாமா? மருத்துவர் தரும் விளக்கம்
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
முலாம்பழத்தில் கரோட்டினாய்டுகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படுகிறது. இவை உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாவதைத் தடுக்கிறது. இவை புதிய செல்களை உருவாவதற்கு உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

குழந்தையின் பார்வை மேம்பாட்டிற்கு
கர்ப்ப காலத்தில் முதல் சில மாதங்களிலேயே குழந்தையின் கண்கள் உருவாகத் தொடங்குகிறது. மேலும், கர்ப்பத்தின் முடிவில் கண்களுக்கு முழுமையாக இரத்தம் வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ள முலாம்பழம் போன்றவற்றை உட்கொள்வது குழந்தை கண் பிரச்சனைகளுடன் பிறக்கும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது.
கால் பிடிப்புகளைக் குணப்படுத்த
கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாக இரவில் கால் பிடிப்புகள் ஏற்படலாம். இது ஏற்படுவதற்கான முக்கிய காரணம் போதுமான அளவு பொட்டாசியம் இல்லாததே ஆகும். இந்த தாதுப்பொருள்களை அதிகம் பெறுவதற்கு முலாம்பழம் சிறந்த வழியாகும்.
எப்படி சாப்பிடுவது?
- கர்ப்ப காலத்தில் முலாம்பழம் சாப்பிட விரும்புபவர்கள் அதன் தோலை சுத்தம் செய்ய நீரில் நன்கு கழுவி, டைல்யூட்டட் வினிகரில் சில நொடிகள் வைக்கலாம்.
- பிறகு மீண்டும் தண்ணீரில் கழுவி முலாம்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சுத்தமான முலாம்பழம் சாப்படுவது உடல் நலத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
- கர்ப்பிணி பெண்கள் நீரேற்றமாக இருப்பதற்கு முலாம்பழம் சிறந்த தேர்வாகும்.
எனினும் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் முலாம்பழத்தை அதிகம் சாப்பிடும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Orange During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் இது தெரிஞ்சா இனி தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவீங்க
Image Source: Freepik