Doctor Verified

Early Pregnancy Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறிகள். பெண்கள் இத கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

  • SHARE
  • FOLLOW
Early Pregnancy Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறிகள். பெண்கள் இத கட்டாயம் தெரிஞ்சிக்கணும்


Early Signs And Symptoms Of Pregnancy: ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் கர்ப்பம் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். இந்த காலகட்டத்தில் பெண்கள் தங்களது உடல் மற்றும் மனநிலையில் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் சில சமயங்களில் பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, சில பெண்களுக்கு நீண்ட காலமாக தங்கள் கர்ப்பத்தைப் பற்றி தெரியாமல் இருப்பதாகும்.

இந்த சூழ்நிலையில், கர்ப்பத்தைத் தொடக்கத்திலேயே அறிந்து கொள்வது அவசியமாகும். பெண்களின் உடலில் கர்ப்பத்தின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கலாம். இது குறித்து, குர்கானில் உள்ள மதர்ஹூட் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் சோனல் சிங்கால் (மூத்த ஆலோசகர் - மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்) அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Raspberry During Pregnancy: கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனை எல்லாம் வராமல் தடுக்க ராஸ்பெர்ரி பழத்தை சாப்பிடுங்க

கர்ப்ப அறிகுறிகள் தோன்றும் நேரம்

மகப்பேறு மருத்துவர் சோனல் சிங்கால் அவர்களின் கூற்றுப்படி, “சில பெண்களில் டிபிஓவின் அறிகுறிகள் கர்ப்பமான 5 நாள்களுக்குப் பின் தோன்றும். பெண்களின் கருமுட்டை விந்தணுவுடன் கருவுற்றிருப்பின், அதன் அறிகுறிகள் 5 முதல் 6 நாள்களுக்குப் பின் தோன்றும். இது தவிர, மற்ற அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஐந்தாவது அல்லது ஆறாவது வாரத்தில் சிலர் ஆறு அல்லது எட்டாவது வாரத்தில் கர்ப்ப அறிகுறிகளை அனுபவிப்பர்.” இதன் காரணமாகவே பல பெண்கள் கர்ப்பம் பற்றி தெரியாமல் இருக்கின்றனர்.

கர்ப்ப காலத்தின் ஆரம்ப அறிகுறிகள்

மாதவிடாய் விடுப்பு

பெண்கள் மாதவிடாய் தள்ளிப் போகிறது எனில், முதலில் கருத்தரிப்பு பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் இது கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அதிக பசி உணர்வு

பசி திடீரென அதிகரித்து, அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இது கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக மாதவிடாய் தவறியிருப்பின், உணவின் சுவை பிடிக்காது அல்லது சுவையில் மாற்றம் கூட இல்லை எனில் இது கர்ப்பத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் பசியை உணர்ந்தால் கர்ப்ப பரிசோதனை செய்யலாம்.

அதிகப்படியான சிறுநீர் கழிப்பது

தவறவிட்ட பிறகு மாதவிடாய் இயல்பை விட அதிகமாக இருப்பது அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுவது போன்றவை கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Walking During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் அதிகமா வாக்கிங் போறது நல்லதா?

மனநிலை மாற்றங்கள்

ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். இது கர்ப்பத்தின் பொதுவான அறிகுறியாகும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படலாம். இதில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையும் அடங்கும்.

ஒரு பக்கத்தில் பிடிப்பு மற்றும் வலி

கர்ப்பிணி பெண்களின் உடலின் ஒரு பக்கத்தில் வலி ஏற்படலாம் அல்லது அடிக்கடி பிடிப்புகள் உண்டாகும். சில பெண்கள் கடுமையான பிடிப்புகளைச் சந்திக்க நேரிடலாம். இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

மார்பகம் மென்மையாகுதல்

கர்ப்ப காலத்தில் மார்பகங்கள் மென்மையாக இருப்பது மார்பகத்தின் அளவு அதிகமாக இருப்பது போன்றவை தோன்றலாம். மேலும் இந்த காலகட்டத்தில் மார்பகங்களை சிறிது தொடுவது கூட வலியை ஏற்படுத்தலாம் மற்றும் முலைக்காம்புகளின் நிறம் கருமையாகலாம்.

மிகவும் சோர்வாக உணர்வது

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவு கணிசமாக அதிகரிக்கலாம். இதனால், பெண்கள் நாள் முழுவதும் சோர்வை உணர்வார்கள். எனினும், கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களுக்குப் பின் சோர்வு பிரச்சனை ஏற்படுவது பொதுவானதாகும்.

பெண் மாதவிடாய் தவறுதலுடன், மேற்கொண்ட அறிகுறிகளைக் கண்டால், கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் அல்லது மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Brinjal During Pregnancy: என்ன சொல்றீங்க. கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாதா?

Image Source: Freepik

Read Next

Pre-pregnancy care:தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த டயட்டீஷியன் தரும் முக்கிய குறிப்புகள்!

Disclaimer