$
Side Effects Of Brinjal During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உணவு முறைகளை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது பல கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மேலும், இது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கர்ப்ப காலத்தில் மிகவும் சூடான உணவுகள், குளிர்ந்த உணவுகள், புளிப்பு உணவுகளை உட்கொள்ளும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அந்த வகையில் கர்ப்ப காலத்தில் கத்தரிக்காய் உட்கொள்வது குறித்து பல்வேறு ஆய்வுகளில் கூறப்படுகிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் கத்தரிக்காயை தவறான வழியில் உட்கொள்வது பல்வேறு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் கர்ப்ப காலத்தில் கத்தரிக்காய் சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Moringa Leaves During Pregnancy: கர்ப்பிணி பெண்களுக்கு முருங்கை இலை தரும் ஆரோக்கிய நன்மைகள்இதோ
கர்ப்ப காலத்தில் கத்தரிக்காயை ஏன் சாப்பிடக்கூடாது?
கத்தரிக்காயில் உடலுக்குத் தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆயுர்வேதத்தின் படி, கத்தரிக்காய் உட்கொள்வது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்காது. இது குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் ஆயுர்வேதாச்சார்யா டாக்டர் எஸ்.கே.பாண்டே அவர்கள் கூறுகையில், கத்தரிக்காயில் அதிகளவு பைட்டோஹார்மோன்கள் காணப்படுகிறது. இவை கர்ப்ப காலத்தில் பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை, மாதவிடாய்களைத் தூண்டுவது உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே கர்ப்ப காலத்தில் தினமும் கத்தரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கர்ப்ப காலத்தில் கத்தரிக்காய் சாப்பிடுவதன் விளைவுகள் சிலவற்றை இதில் காண்போம்.

கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதன் விளைவுகள்
அமிலத்தன்மை மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனை
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காயை அதிகளவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படலாம். கத்தரிக்காய் செரிமானம் அடைய சிறிது நேரம் எடுக்கலாம். எனவே, கர்ப்ப காலத்தில் கத்தரிக்காயின் நுகர்வு தவிர்க்கப்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருக்கலாம். எனவே கத்தரிக்காயை அதிகம் உட்கொள்வது இந்த பிரச்சனையை அதிகரிக்கலாம்.
முன்கூட்டிய பிரசவம்
கர்ப்ப காலத்தில் அதிகளவு கத்தரிக்காயை சாப்பிடுவது முன்கூட்டிய பிரசவம் ஏற்படும் அபாயம் ஏற்படலாம். கத்தரிக்காய் டோக்ஸோபிளாஸ்மோசிஸ் உள்ள மண்ணில் வளர்க்கப்படுகிறது. இதை அதிகம் உட்கொள்வதால் முன்கூட்டிய பிரசவத்திற்கான வாய்ப்பு அதிகமாகலாம். இதைத் தவிர்க்க, எப்போதும் கத்தரிக்காயை நன்கு கழுவிய பின்னரே சமைத்து சாப்பிட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Grapes During Pregnancy: கர்ப்பிணிகள் திராட்சை சாப்பிடலாமா? - தெரிஞ்சிக்கோங்க!
மாதவிடாய் பிரச்சனை
கர்ப்ப காலத்தில் கத்தரிக்காய் அதிகளவில் உட்கொள்வது அல்லது தினமும் உட்கொள்வது மாதவிடாய் தொடர்பான பிரச்சனையை சாத்தியமாக்கலாம். இதில் உள்ள பைட்டோஹார்மோன்கள் மாதவிடாய் தூண்டுதலை அதிகரிக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் கத்தரிக்காய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், கத்தரிக்காயை மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு மிகக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

கருச்சிதைவு அபாயம்
கர்ப்ப காலத்தில் கத்தரிக்காயை அதிகம் உட்கொள்வது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கலாம். கத்தரிக்காய் சூடான தன்மை கொண்டதாகும். இது வயிற்றில் உள்ள குழந்தைக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே கர்ப்ப காலத்தில் கத்தரிக்காயை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் கத்தரிக்காயை உட்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது.
கர்ப்ப காலத்தில் அதிகளவில் கத்தரிக்காயை உட்கொள்வது உடல்நலப் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். எனவே அதிகப்படியான கத்தரிக்காயை உட்கொள்ளும் முன்னதாக, மேலே கூறப்பட்ட விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். கத்தரிக்காயை சாப்பிடும் முன்பாக, மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Raspberry During Pregnancy: கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனை எல்லாம் வராமல் தடுக்க ராஸ்பெர்ரி பழத்தை சாப்பிடுங்க
Image Source: Freepik