Pregnancy Age Issue: ஒரு பெண் கருத்தரிக்க சிறந்த வயது எது?

  • SHARE
  • FOLLOW
Pregnancy Age Issue: ஒரு பெண் கருத்தரிக்க சிறந்த வயது எது?


Pregnancy Age Issue: தாய்மை என்பது வரம் என்று கூறுவதுண்டு, கருத்தரிப்பு என்பது எந்த வயதிலும் நடக்கலாம். இந்த கட்டுரையில் மருத்துவர் பரிந்துரைப்படி கருத்தரிக்க சிறந்த வயது எது என்பது குறித்தே இந்த பதிவில் பார்க்கலாம்.

டிஜிட்டல் யுகத்தில் எதுவும் முடியாதது என்றில்லை, எதையும் நினைத்தால் சாதிக்க முடியும் இந்த காலக்கட்டத்தில் தாய்மைக்கான வழிகளை ஏற்படுத்தவும் பல வழிகள் உள்ளன. தங்களது நம்பிக்கையும், சரியான ஆரோக்கிய வழிகளை பின்பற்றுவதுமே சிறந்த வழியாகும். சரி, கருத்தரிக்க சரியான வழி எது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: High BP During Pregnancy: கர்ப்ப கால இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத வைத்தியங்கள் இதோ

20 முதல் 30 வயதிற்குள் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்பு

20 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு பெண்ணுக்கு 21 வயது இருக்கும் போது, ​​அவளது முட்டைகள் 90 சதவிகிதம் வரை குரோமோசோமால் இயல்பானதாக இருக்கும். இது மட்டுமின்றி, 20 முதல் 30 வயதுக்குள் ஒரு பெண்ணின் கருவுறுதல் 20 முதல் 30 வரை உச்சத்தில் உள்ளது.

ஆனால், வயது அதிகரிக்கும் போது, ​​கருவுறுதல் அளவு 25 சதவீதம் வரை குறைகிறது.ஆனால், 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இயற்கையாகவே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.அ25 வயதிற்குப் பிறகு, கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து 10 சதவீதம் மட்டுமே என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

31 முதல் 40 வயதிற்குள்ளான கருத்தரிக்கும் வாய்ப்பு

30 வயதிற்குள் அதாவது 30 முதல் 34 வயதிற்கு இடைப்பட்ட பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருந்தாலும், அவர்கள் விரும்பினால், அவர்கள் இயற்கையான முறையில் கருத்தரிக்கலாம்.

இருப்பினும், இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பெண்கள் சிறுவயதிலிருந்தே இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். சில சிகிச்சையின் உதவியுடன் கருவுறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

ஆனால், 35 வயதிற்குப் பிறகு, கருவுறுதல் வாய்ப்பு கணிசமாக குறையத் தொடங்குகிறது. இதற்குப் பிறகு வயது, கருத்தரிப்பதில் சிரமங்கள் மட்டுமல்ல, கர்ப்பத்தை பராமரிப்பதிலும் பல சவால்கள் இருக்கலாம். இதுமட்டுமின்றி, 35 வயதிற்குப் பிறகு, கருச்சிதைவு, முன்கூட்டிய பிரசவம், இன்னும் பல உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, 35 வயதிற்குப் பிறகு, ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்பு 30 சதவிகிதம் குறைகிறது என்று கூறலாம். இருப்பினும் முன்னதாக கூறியது டிஜிட்டல் யுகத்தில் எதுவும் சாத்தியம் அதேபோல் ஆரோக்கியமான உணவு முறை என்பதும் மிக அவசியம்.

41 முதல் 50 வயதிற்குள்ளான கருத்தரிக்கும் வாய்ப்பு

வயது அதிகரித்து, ஒரு பெண் நடுத்தர வயதை அடையும் போது, ​​அவளது கர்ப்பத்திற்கான வாய்ப்புகள் கணிசமாக குறைந்து கொண்டே இருக்கும். 40 வயதிற்குப் பிறகு, முட்டையின் தரம் மற்றும் அளவு இரண்டின் அளவும் குறைகிறது. இந்த வயதில் பல உடல் சார்ந்த பிரச்சனைகளும் சேர்ந்து, கர்ப்பம் தரிப்பதில் பல புதிய சவால்கள் உருவாகத் தொடங்குகின்றன.

மேலும் படிக்க: Shasti Vratam: கர்ப்பிணி பெண்கள் விரதம் இருப்பதற்கான டிப்ஸ்…

40 வயதிற்குப் பிறகு, பெண்களின் முட்டைகளில் 90 சதவீதம் வரை அசாதாரணமாக மாறும். அதுமட்டுமின்றி ஆண்களின் விந்தணுவின் தரமும் குறைகிறது. அத்தகைய சூழ்நிலையில், தம்பதியரால் கருத்தரிக்க இயலாது. அதேபோல் மாதவிடாய் நின்ற பிறகு, ஒரு பெண்ணில் கருத்தரிக்கும் சாத்தியம் முற்றிலும் மறைந்துவிடும்.

Image Source: FreePik

Read Next

Grapes During Pregnancy: கர்ப்பிணிகள் திராட்சை சாப்பிடலாமா? - தெரிஞ்சிக்கோங்க!

Disclaimer

குறிச்சொற்கள்