Shasti Vratam: கர்ப்பிணி பெண்கள் விரதம் இருப்பதற்கான டிப்ஸ்…

  • SHARE
  • FOLLOW
Shasti Vratam: கர்ப்பிணி பெண்கள் விரதம் இருப்பதற்கான டிப்ஸ்…


Guidelines For Pregnant Women During Shasti Vratam: சஷ்டி விருதம் என்பது முருகனுக்காக வேண்டி விருதம் இருப்பது. திருமண பாக்கியம், குழந்தை வரம் போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டி, முருகனுக்கு விரதம் இருப்பார்கள். இந்த சஷ்டி விரதத்தை கர்ப்பிணி பெண்களும் இருப்பார்கள்.

கர்ப்பிணி பெண்கள் விரதம் இருக்கலாமா? அப்படி சஷ்டி விரதம் இருக்கும் போது, அவர்கள் எந்தமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை இங்கே காண்போம்.

கர்ப்பிணி பெண்கள் விரதம் இருக்கும் முறை

பால் குடிக்கவும்

கர்ப்பிணி பெண்கள் எதையும் சாப்பிடாமல் விரதம் இருக்கக்கூடாது. இது அவர்களுடன் சேர்த்து, வயிற்றில் உள்ள குழந்தைகளையும் பாதிக்கும். இதனால் விரதம் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக பால் குடிக்க வேண்டும். இதில் உள்ள கால்சியம் நிறைந்துள்ளது. நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்க இது உதவுகிறது.

இதையும் படிங்க: Meena Sankranti: மீனா சங்கராந்தி அன்று இந்த உணவுகளை சாப்பிடுங்கள்…

போதுமான ஓய்வு

விருதம் இருக்கும் போது கர்ப்பிணி பெண்களின் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். இது அவர்களுக்கு அதீத சோர்வை ஏற்படுத்தும். இதனால் மயக்கம், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனை கட்டுப்படுத்த ஓய்வு முகவும் அவசியம்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்

பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு மன அழுத்தம் இருக்கும். ஆனால், இவர்கள் விரதம் இருக்கும் போது, இது அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த தளர்வு பயிற்சியகள் செய்யவும்.

தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்

கர்ப்பிணி பெண்கள் விரதம் இருக்கும் போது, உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். இது போன்ற நேரத்தில் நீரேற்றமாக இருப்பது நல்லது. இதற்கு நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Image Source: Freepik

Read Next

Miscarriage prevention: கருச்சிதைவு அபாயத்தை தவிர்க்க இந்த உணவுகளிடம் இருந்து விலகி இருங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்