$
Foods To Avoid To Prevent A Miscarriage: கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமான கலாம். இந்த காலத்தில் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் நீங்கள் எந்த செயலை செய்தாலும், அது கருவில் இருக்கும் குழந்தையை நேரடியாக பாதிக்கும். குறிப்பாக, நீங்கள் உண்ணும் உணவுகள். எனவே, பல நேரங்களில் நாம் கவனம் இல்லாமல் உட்கொள்ளும் பொருட்கள், கருச்சிதைவை ஏற்படுத்து.
அதனால்தான் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. கருச்சிதைவு அபாயத்தை குறைக்க அல்லது தவிர்க்க கர்ப்ப காலத்தில் எந்தெந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவை உங்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Pregnancy Tips: கர்ப்ப காலத்தில் இந்த விஷயத்தில் அலட்சியம் செய்யக்கூடாது!
கருச்சிதைவு அபாயத்தைத் தவிர்க்க என்னலாம் சாப்பிடக்கூடாது?

வேம்பு
காலம் காலமாக வேம்பு பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும், கர்ப்ப காலத்திற்கு உகந்தது அல்ல. கருச்சிதைவை உண்டாக்கும் குணம் வேம்புக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கர்ப்ப காலத்தில் வேப்பம்பூவை உட்கொள்வது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தும், இது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
இலவங்கப்பட்டை
எடை குறைப்பு முதல் செரிமான பிரச்சினை அனைத்திற்கும் நாம் தற்போது இலவங்கப்பட்டையை பயன்படுத்துகிறோம். ஆனால், இலவங்கப்பட்டையை அதிக அளவில் உட்கொள்வது கருப்பைக்கு தீங்கு விளைவிக்கும். இது கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும்.
இஞ்சி
இஞ்சி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி இயற்கையில் சூடான தன்மை கொண்டது. எனவே இதை அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : High BP During Pregnancy: கர்ப்ப கால இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத வைத்தியங்கள் இதோ
பப்பாளி

பச்சை பப்பாளியில் இருக்கும் சில நொதிகள் கருப்பைச் சுருக்கத்தை ஏற்படுத்தும். இது கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே தான் மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள் பச்சை பப்பாளி சாப்பிடுகிறார்கள்.
அன்னாசி
அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் உள்ளது. இது ஒரு வகை நொதியாகும். இது கருப்பை வாயை மென்மையாக்கும் மற்றும் கருப்பைச் சுருக்கங்களை ஏற்படுத்தும். மேலும், கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும்.
உலர் பாதாமி மற்றும் அத்தி
இந்த பொருட்களில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும்போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது மற்றும் அதன் அதிகப்படியான நுகர்வு கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : கருவின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சி இந்த வைட்டமின் ரொம்ப முக்கியம்!
காஃபி

காபியில் அதிக அளவு காஃபின் உள்ளது. இது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் காபி நுகர்வு குறைக்க அல்லது தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
அசைவ உணவுகள்
லிஸ்டீரியா அல்லது டோக்ஸோபிளாஸ்மா போன்ற பாக்டீரியாக்கள் இந்த உணவுகளில் காணப்படுகின்றன. இது கருச்சிதைவை ஏற்படுத்துகிறது மற்றும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.
Pic Courtesy: Freepik