Heat Wave: அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் வெப்ப அலையால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகிறது. குறிப்பாக தோலில் பல பிரச்சனைகள் ஏற்படும். இதில் ஒன்றுதான் வெப்ப அலையால் ஏற்படும் தோல் தழும்புகள். இது ஏன் ஏற்படுகிறது, இதை எப்படி வீட்டிலேயே சரிசெய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
உங்கள் வியர்வை சுரப்பிகள் தடுக்கப்படும் போது வெப்பத் தடிப்புகள் ஏற்படுகின்றன. இது தோலின் மேல் அடுக்குகளில் வியர்வை உருவாக்க வழிவகுக்கிறது. அதேபோல் தோல் துகள்களில் அதிகப்படியான வியர்வை காரணமாக பாக்டீரயா சேர்ந்து அந்த துகளை அடைக்க வழிவகை செய்கிறது. இறுக்கமான ஆடைகள் அணிவதும் இந்த பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது.
வெப்ப சொறி பிரச்சனை என்பது வெப்பமான காலநிலையில் அடிக்கடி ஏற்படும் ஒரு வலிமிகுந்த தோல் நிலையாகும். எரியும் அல்லது அரிப்பு உணர்வுடன் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
வெப்ப தோல் பிரச்சனை பெரும்பாலும் எங்கு தோன்றும்?
கழுத்தில்
இடுப்புக்கு அருகில்
அக்குள் பகுதி
அதிகப்படியான வியர்வை துளைகளை தடுக்கும் போது வெப்ப சொறி ஏற்படுகிறது. நீங்கள் வெப்பமான காலநிலையில் வாழ்ந்தால் உங்களுக்கு வெப்ப சொறி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பெரும்பாலான நேரங்களில் வெப்ப தழும்பு பிரச்சனை என்பது தீவிரமானது அல்ல, சமயத்தில் அது குளிர்ந்த வெப்பநிலையில் மறைந்துவிடக்கூடும். இருப்பினும், அதிகப்படியான வியர்வை தொடர்ந்தாலோ அல்லது வெப்ப அதிகமாக இருந்தாலோ அது மோசமாகிவிடும்.
உஷ்ணத்தால் ஏற்படும் வெப்ப பிரச்சனை அறிகுறிகள்
சிறிய சிவப்பு புள்ளிகள் அல்லது தெளிவான கொப்புளங்கள்.
குழந்தைகளுக்கு பெரும்பாலும் தோல் மடிப்பு அல்லது முகத்தில் தோன்றக் கூடும்.
தோலில் எரிச்சல் உணர்வு
பாதிக்கப்பட்ட பகுதியில் சிவந்து காணப்படுதல் மற்றும் லேசான வீக்கம்.
வெப்ப சொறி பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள்
வெப்பம் அல்லது அதிக ஈரப்பதம் காரணமாக வியர்வை குழாய்களில் ஏற்படும் அடைப்புகள்
வியர்வை சுரப்பிகளில் ஏற்படும் அழற்சியும் வெப்ப சொறி பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.
வெப்ப அலை தோல் பிரச்சனையை போக்க உதவும் வீட்டு வைத்தியம்
சந்தனப் பொடியை சிறிதளவு தண்ணீரில் கலந்து சொறி உள்ள இடத்தில் தடவினால், உஷ்ணத்துடன் தொடர்புடைய எரியும், வலி உணர்வும் குறையும். 2 பங்கு சந்தனப் பொடியை 1 பங்கு தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும். இதை அப்ளை செய்யவும்,
அலோவேரா ஜெல் சாறுகள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளன. அவை வெப்ப சொறியைத் தணிக்கவும் அதன் அறிகுறிகளை குறைக்கவும் உதவுகின்றன. புதிதாக எடுத்த கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் நன்கு மசாஜ் செய்யவும்.
முல்தானி மிட்டி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் வெப்ப சொறியைத் தணிக்க உதவுகிறது. ஏனெனில் இது வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அரை டீஸ்பூன் முல்தானி மிட்டியை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தடவி 10 நிமிடங்கள் விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
துளசி எரிச்சல், சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. சில துளசி இலைகளை தேனுடன் அரைத்து பேஸ்ட் செய்து சொறி பிரச்சனை உள்ள இடத்தில் தடவவும்.
நீரேற்றத்துடன் இருப்பது அவசியம்
நீரேற்றமாக இருக்க ஆராக்கியமான நீராகரங்கள், குறிப்பாக தண்ணீர் குடிப்பது அவசியம். சரியான நீரேற்றம் உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இவை அனைத்தும் வீட்டிலேயே Heat Rashes பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. இருப்பினும் உங்களுக்கு ஏதேனும் தீவிர பிரச்சனைகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik