Doctor Verified

Walking During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் அதிகமா வாக்கிங் போறது நல்லதா?

  • SHARE
  • FOLLOW
Walking During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் அதிகமா வாக்கிங் போறது நல்லதா?

நிபுணர்களின் கூற்றுப்படி, தினந்தோறும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் தசைகள் திறக்கப்பட்டு, நல்ல ஹார்மோன்களை வெளியிடுகிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் அதிகம் நடப்பது பலன் தருமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இது பெண்களுக்குத் தீங்கு விளைவிக்குமா போன்ற கேள்விகளுக்கு சாரதா மருத்துவமனையின் மகளிர் மருத்துவத் துறையின் பிரிவுத் தலைவர், பேராசிரியர் & மூத்த ஆலோசகர் டாக்டர் ருச்சி ஸ்ரீவஸ்தவா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Raspberry During Pregnancy: கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனை எல்லாம் வராமல் தடுக்க ராஸ்பெர்ரி பழத்தை சாப்பிடுங்க

கர்ப்ப காலத்தில் அதிகம் நடப்பதன் விளைவுகள்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் நடக்க வேண்டும் என்பது உண்மையே. இது பெண்களின் இடுப்புப் பகுதி மற்றும் தசைகளைத் திறக்க வைத்து பிரசவத்தின் சிரமங்களைக் குறைக்கிறது. அது மட்டுமல்லாமல், சில சமயங்களில் நடைபயிற்சி சாதாரண பிரசவத்திற்கு துணைபுரிகிறது. எனவே ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் தனது முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதங்களின் படி நடக்க வேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் இருப்பவர்கள், 30-35 நிமிடங்கள் கணக்கில் வாரத்தில் ஐந்து நாள்கள் நடக்கலாம். இரண்டாவது மூன்று மாதங்களில் 20 முதல் 25 நிமிடத்திற்கு வாரத்தில் ஐந்து நாள்கள் நடக்கலாம். இதனைத் தொடர்ந்து மூன்றாவது மூன்று மாதத்தில் 10 நிமிட நடைபயிற்சியாக வாரத்தில் ஐந்து நாள்கள் நடக்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.

ஆனால் இதை விட அதிகம் நடப்பது கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். மேலும் தசைகள் பாதிப்படைவதுடன், எலும்புகளில் அழுத்தம் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: High BP During Pregnancy: கர்ப்ப கால இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத வைத்தியங்கள் இதோ

கர்ப்ப காலத்தில் அதிகம் நடப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

  • கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் நடைபயிற்சி மேற்கொள்வது பெண்களை சோர்வடைய வைக்கலாம்.
  • கர்ப்ப காலத்தில் அதிகம் நடப்பது தொடை மற்றும் உள்ளங்கால்களில் வலியை அதிகரிக்கிறது.
  • சில சமயங்களில் அதிக நடைபயணம் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
  • அதிகளவு நடைபயிற்சி செய்வது இடுப்புப் பகுதியில் அழுத்தம் மற்றும் வலியை அதிகரிக்கும்.

கர்ப்ப காலத்தில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

  • கர்ப்பிணி பெண்கள் நடப்பது புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
  • கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வது உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது.
  • இந்த காலகட்டத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்றவற்றின் அறிகுறிகளைக் குறைக்கலாம்.
  • இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Brinjal During Pregnancy: என்ன சொல்றீங்க. கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாதா?

Image Source: Freepik

Read Next

Brinjal During Pregnancy: என்ன சொல்றீங்க. கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாதா?

Disclaimer