
Early warning signs of thyroid disease most people miss: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளும் அடங்குகிறது. தைராய்டு பிரச்சனைகள் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பொதுவாக கழுத்தின் முன்புறம், தொண்டையில் பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ள ஒரு சுரப்பியைக் குறிக்கிறது. இவை தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடல் ஆற்றலைப் பயன்படுத்தும் விதத்தைக் கட்டுப்படுத்துகிறது.
ஆனால், இந்த ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்தால் ஹைப்பர் தைராய்டிசம் (அதிதைராய்டிசம்) என்றும், குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் (செயலற்ற தைராய்டு) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தைராய்டு பிரச்சனைகள் உடலில் ஏற்படுவதால் பல்வேறு அறிகுறிகள் தென்படுகிறது. இதற்கு சிலர் தைராய்டு பரிசோதனைகளை மேற்கொள்வர். ஆனால், அவர்களுக்கு தைராய்டு ஹார்மோன் அளவு சரியாக இருப்பதாகத் தெரியும். ஆனால், சரியான பரிசோதனைகள் மேற்கொண்டாலும் உடலில் தைராய்டு சீரற்றதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகேர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நிபுணர் “தைராய்டு பரிசோதனை "சாதாரணமானது" - ஆனால் நீங்கள் இன்னும் சோர்வாக உணர்கிறீர்களா? நீங்கள் நினைப்பதை விட இது மிகவும் பொதுவானது.” என்று தனது பதிவைத் தொடங்கியுள்ளார். அதற்கு முன்பாக, தைராய்டு ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு நோயாளிகள் ஜவ்வரிசி சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
தைராய்டு ஏற்பட காரணங்கள்
தைராய்டு ஏற்படுவதற்கான காரணங்கள் குறிப்பாக, இளம் வயதில் ஏற்படுவதற்கு அயோடின் குறைபாடு, தன்னுடல் தாக்கக் கோளாறான ஹாஷிமோட்டோவின் தைராய்டிடிஸ், பதற்றம், மரபணு காரணங்கள், உடல் பருமன் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தைராய்டு நோய்க்கான அறிகுறிகள்
- மனச்சோர்வு
- எடை அதிகரிப்பு
- தசை பலவீனம்
- அதிகப்படியான வியர்வை
- சோர்வு
- முடி உதிர்வு
- மலச்சிக்கல்
இது போன்ற பல்வேறு அறிகுறிகள் தைராய்டு பிரச்சனையின் காரணமாக ஏற்படக்கூடியதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு + முடி உதிர்வு.. இரண்டுக்கும் ஒரே தீர்வு இந்த Magic Drinks தான்..
தைராய்டு மந்தமா இருப்பதற்கான அறிகுறிகள்
தைராய்டு பரிசோதனைகளில், TSH உட்பட அனைத்தும் சரியான நிலையில் இருந்த போதிலும், சிலர் அதிக சோர்வு மற்றும் சோம்பலுடன் காணப்படுவர். நிபுணர் அஞ்சலி முகேர்ஜி அவர்கள் தைராய்டு மந்தமாக இருப்பதை புரிய வைக்க தோன்றும் அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பகிர்ந்துள்ளார்.
நல்ல தூக்கத்திலும் சோர்வு
நிபுணரின் கூற்றுப்படி, “8 மணி நேரம் தூங்கினாலும் இன்னும் சோர்வாக உணர்வது” தைராய்டின் மந்தமான அறிகுறியைக் குறிக்கலாம் என நிபுணர் கூறுகிறார். அதாவது இரவு 8 மணி நேரம் தூங்கிய போதும், உடல் சோர்வாக உணர்வர்.
சருமம் வறண்டு போவது
சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்க, அனைத்து கிரீம்களையும் பயன்படுத்தினாலும், சருமம் வறண்டு போவது தைராய்டுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒழுங்கற்ற அல்லது அதிக மாதவிடாய்
பெண்களுக்கு ஒழுங்கற்ற அல்லது அதிக மாதவிடாய் பிரச்சனைகள் இருப்பது தைராய்டின் மந்தமான அறிகுறியைக் குறிக்கிறது.
View this post on Instagram
மனதளவில் மூடுபனி அல்லது இடைவெளியுடன் உணர்வது
மூளை மூடுபனி அதாவது தெளிவற்ற சிந்தனை இருப்பது தைராய்டின் மந்தமான அறிகுறியைக் குறிப்பதாகும். உதாரணமாக, மீட்டிங்கில் மக்களோடு இருந்த போதிலும், எளிமையான விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.
அதிகரிக்கும் கொழுப்பின் அளவு
தைராய்டின் மந்தமான அறிகுறியாக உடலில் கொழுப்பு எந்த காரணமும் இல்லாமல் உயர்வதைக் குறிக்கிறது. தைராய்டு சரியாக வேலை செய்யும்போது, அது இரத்தக் கொழுப்புகள், உணவுக் கொழுப்புகள் உட்பட எல்லாவற்றையும் சரியாக வளர்சிதை மாற்ற உதவுகிறது. ஆனால் தைராய்டு மந்தமா இருக்கும்போது, கொழுப்பின் அளவும் உயரும்.
இந்த அறிகுறிகள் தைராய்டு நோய்க்கான மந்தமான அறிகுறியாக இருக்கும் என நிபுணர் கூறியுள்ளார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: சிறந்த தைராய்டு செயல்பாட்டிற்கு.. இந்த வழியில் திராட்சையை சாப்பிடுங்கள்..
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version