பலர் வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வதற்கு லெமன் ஜூஸை பயன்படுத்துகிறார்கள். இதை வைத்து கர்ப்ப பரிசோதனை செய்வது மிக எளிமையாக இருக்கும். மேலும் இது ரொம்ப சிக்கனமானதும் கூட. அதனால் தான் பலர் இதனை தேர்வு செய்கிறார்கள். ஆனால் இந்த சோதனை சரியான முடிவுகளை தருமா? இது குறித்து இந்த பதிவில் காண்போம். மேலும் இதனை எப்படி சோதனை செய்வது, அதன் முடிவுகளை எப்படி அறிவது எனப்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இதையும் படிங்க: கருச்சிதைவு ஏற்படுவதை எப்படி தடுப்பது? எதனால் ஏற்படுகிறது? மருத்துவரின் 5 ஆலோசனைகளை கேளுங்கள்!!
முக்கிய கட்டுரைகள்
லெமன் ஜூஸ் வைத்து கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?
லெமன் ஜூஸ் கொண்டு கர்ப்ப பரிசோதனை செய்யும் முறை மிகவும் எளிதானது. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
* கண்ணாடி - 1
* எலுமிச்சை - 1
* சிறுநீர் - காலையில் முதல் துளி
செய்முறை:
* காலை சிறுநீரில் சில துளிகள் கண்ணாடியில் வைக்கவும்.
* இப்போது இந்த கண்ணாடியில் சில துளிகள் எலுமிச்சையை வைக்கவும்.
* முடிவுகளுக்கு சிறிது நேரம் காத்திருக்கவும்.
முடிவுகளை எவ்வாறு அறிவது?
சிறுநீரில் லெமன் ஜூஸ் சேர்த்த பிறகு சிறுநீரின் நிறம் பச்சையாக மாறினால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சிறுநீரின் நிறத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால், நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தம்.
நீங்கள் எலுமிச்சையுடன் கர்ப்ப பரிசோதனை செய்து, அதன் விளைவு எதிர்மறையாக இருந்தபோதிலும், உங்கள் உடலில் கர்ப்பத்தின் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
Image Source: Freepik