Pregnancy Check: வீட்டிலேயே கர்ப்பத்தை கண்டறிவது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Pregnancy Check: வீட்டிலேயே கர்ப்பத்தை கண்டறிவது எப்படி?

How To Check Pregnancy At Home Naturally: தற்காலத்தில் ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ய ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்குச் செல்லத் தேவையில்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேனோ? அல்லது என் மாதவிடாய் தாமதமாகிறதா? போன்றவை ஒரு பெண்ணை எளிதில் குழப்பமடையச் செய்யலாம். ஆனால், மாதவிடாய் தாமதத்திற்குப் பின் ஒரு பெண் வீட்டிலேயே கர்ப்பத்தை சரிபார்க்க சிறந்த வழிகளில் ஒன்றாகும்.


முக்கியமான குறிப்புகள்:-


வீட்டிலேயே எளிதான முறையில் கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வதற்கு சில வழிகள் உள்ளன. வீட்டில் கிடைக்கும் சில எளிய மற்றும் இயற்கையான பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் கர்ப்ப பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். இதில் வீட்டில் கர்ப்பத்தை எவ்வாறு பரிசோதிப்பது என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Swimming During Pregnancy: கர்ப்ப காலத்தில் நீச்சலடிப்பது நல்லதா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

வீட்டிலேயே கர்ப்பத்தை எவ்வாறு சரிபார்ப்பது?

பெண்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, இல்லையா என்பதை உறுதி செய்வதற்கு மிகச்சிறந்த வழிகளில் ஒன்றாக அமைவது மாதவிடாய் தவறிய முதல் நாளில் கர்ப்ப பரிசோதனை மேற்கொள்வதாகும். பெண்கள் அடுத்த மாதவிடாய் தேதி தெரியாவிட்டால், பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொண்ட 21 நாள்களுக்குப் பிறகு கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கர்ப்ப பரிசோதனை கருவிகள் அதாவது சிறுநீரில் உள்ள hCG-ஐக் கண்டறியும் ஒரு துண்டுடன் வருகிறது. இதில் கோடுகளின் எண்ணிக்கை மூலம் நேர்மறை அல்லது எதிர்மறை கர்ப்பத்தை தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிலேயே கர்ப்பத்தை சரிபார்க்க உதவும் இயற்கை வழிகள்

சமையல் சோடா

கர்ப்பத்தை உறுதி செய்ய வீட்டிலேயே உள்ள சமையல் சோடாவை பயன்படுத்தலாம். இதற்கு தோராயமாக சம அளவு பேக்கிங் சோடாவுடன் சிறுநீரைச் சேர்த்து, சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் படி, சிறுநீரில் hCG இருப்பின், அது பேக்கிங் சோடாவுடன் வினைபுரிந்து வெடிப்பை ஏற்படுத்தலாம். இது கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்கிறது. இது நடக்கவில்லை எனில், பெண் கர்ப்பமாக இல்லை என்பதைக் குறிக்கிறது.

அடிப்படை உடல் வெப்பநிலை

தினமும் அடிப்படை உடல் வெப்பநிலையைக் கண்காணிக்க வேண்டும். இதில் அதிகரித்த புரோஜஸ்ட்ரான் காரணமாக அடிப்படை உடல் வெப்பநிலை உயர்த்தப்படுகிறது. கர்ப்பமாக இருப்பின், இந்த உயர்ந்த வெப்பநிலையானது வழக்கமான இரண்டு வாரங்களுக்கு அப்பால் நீடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vazhakkai During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் வாழைக்காய் சாப்பிடலாமா? இத பார்த்து தெரிஞ்சிக்கோங்க

உப்பு

கர்ப்ப பரிசோதனையில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவும் வீட்டிலேயே நிகழ்த்தக்கூடிய எளிய பரிசோதனைகளில் ஒன்றாகும். இதற்கு ஒரு பெண்ணின் சிறுநீரை உப்புடன் கலந்து அவள் கர்ப்பமாக இருக்கிறாளா என்பதை தீர்மானிக்கலாம். உப்பு சிறுநீர் கலவையின் தோற்றத்தில் மாற்றங்கள் இருந்தால், பெண் கர்ப்பமாக இருப்பதை உணர்த்துகிறது. இந்த கர்ப்ப பரிசோதனையின் துல்லியத்தை ஆதரிக்கும் என்பதில் எந்த வித அறிவியல் ஆதாரமும் இல்லை.

சர்க்கரை

கர்ப்ப பரிசோதனைக்கான மற்றொரு வீட்டு கர்ப்ப பரிசோதனையாக அமைவது சர்க்கரை ஆகும். இது கர்ப்பத்தைக் குறிப்பதாக சிலர் நம்புகின்றனர். ஒரு கிருமி நீக்கம் செய்யப்பட்ட கிண்ணம் ஒன்றில் சில ஸ்பூன் வெள்ளை சர்க்கரை சேர்க்க வேண்டும். இதில் பெண்கள் காலையில் முதலில் செல்லக்கூடிய சிறுநீரை அதன் மேல் ஊற்ற வேண்டும். இதில் சர்க்கரை கட்டியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இந்நிலையில் சர்க்கரை கட்டியாக இருப்பின், கர்ப்பமாக இருப்பதை உணர்த்துகிறது.

கர்ப்பப்பை வாய் சளி மாற்றங்கள்

கருத்தரித்த பிறகு கர்ப்பப்பை வாய் சளி கிரீமியாக மற்றும் தடிமனாக மாறலாம். இந்த மாற்றங்கள் கருத்தரித்த சில நாள்களுக்குப் பிறகு ஏற்படுகிறது. ஆனால், தவறிய மாதவிடாய் நேரத்தை நெருங்கும் போது, அவை மிகவும் கவனிக்கத்தக்கவையாகக் கருதப்படுகிறது.

வீட்டில் கர்ப்ப பரிசோதனைகள் வசதியாக இருப்பினும், இதில் அறிவியல் சரிபார்ப்பு எதுவும் இல்லை. எனவே இவற்றை சில நேரங்களில் தவறான முடிவுகளைப் பெறலாம். வீட்டில் கர்ப்ப பரிசோதனைகளைச் செய்வதாயினும், அவற்றை மட்டும் நம்புவது கூடாது. மேலும், நம்பகமான முடிவுகளைப் பெற, எப்போதும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட கர்ப்ப பரிசோதனைகளை பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு உறுதியான நோயறிதலுக்கு மருத்துவரை அணுகி பயன்பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Morning Sickness Recipes: மார்னிங் சிக்னஸ் குறைக்க உதவும் உணவுகள் இங்கே…

Image Source: Freepik

Read Next

Vazhakkai During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் வாழைக்காய் சாப்பிடலாமா? இத பார்த்து தெரிஞ்சிக்கோங்க

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்