Vazhakkai During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் வாழைக்காய் சாப்பிடலாமா? இத பார்த்து தெரிஞ்சிக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Vazhakkai During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் வாழைக்காய் சாப்பிடலாமா? இத பார்த்து தெரிஞ்சிக்கோங்க

உண்மையில் ஆம். கர்ப்ப காலத்தில் வாழைக்காய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது. கர்ப்பிணி பெண்கள் வாழைக்காய் உட்கொள்வது தாய்க்கும், சேய்க்கும் நன்மை பயக்கும். அவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது தீங்கு விளைவிக்காது. கர்ப்பிணிகள் வாழைக்காய் சாப்பிடலாமா? அவ்வாறெனின் எந்த வகையான நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்த தகவல்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric during Pregnancy: கர்ப்ப காலத்தில் மஞ்சளை உட்கொள்வது குழந்தைக்கு ஆபத்தா? உண்மை இங்கே!

கர்ப்பிணிகள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லதா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உணவில் வாழைக்காயை சேர்த்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளைத் தடுக்க உதவும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான கர்ப்பத்தை ஊக்குவிக்கிறது. வாழைக்காய் உட்கொள்ளல் ஆனது மகப்பேறுவிற்கு முன் கிடைக்கக் கூடிய வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள், ஃபோலிக் அமிலம், ஆற்றல் மற்றும் திசுக்களை உருவாக்கும் கூறுகள் போன்றவற்றை அளிக்கிறது. மேலும் சில வகைகளில் நியூரோடாக்சின்கள் உள்ளது. இவை தாய் மற்றும் சேய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகமாக வைத்துக் கொள்வது அவசியம். ஏனெனில், குறைவான நோயெதிர்ப்புச் சக்தியால் ஏற்படும் சிறிய பாதிப்புகள் தாய், சேய் இருவரையும் பாதிக்கலாம். அதன் படி, கனிம உள்ளடக்கத்தை தவிர வாழைக்காயில் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

ஆரோக்கியமான மகப்பேறு

வாழைக்காயில் தயமின், நியாசின், ஃபோலேட் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணிகள் இந்த ஊட்டச்சத்து நிறைந்த வாழைக்காயை உட்கொள்வதன் மூலம் உடலில் ஆரோக்கியமான ஃபோலேட் அளவை உறுதி செய்யலாம். இவை குறைபிரசவ அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Drinking Milk During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்க வேண்டும்? இதோ பதில்!

குடல் ஆரோக்கியத்திற்கு

கர்ப்பிணி பெண்கள் வாழைக்காய் உட்கொள்வதன் மற்றொரு நன்மையாக, அவர்களின் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலத்தை மென்மையாக்க உதவுகிறது. மேலும் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், மூல நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

எலும்புகளைப் பலப்படுத்த

வலுவான எலும்புகளைப் பெற இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற நிலையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் வாழைக்காயை உட்கொள்வதன் மூலம் இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற்று கருவின் நல்ல வளர்ச்சியை உறுதி செய்கிறது.

ஆற்றலை வழங்க

வாழைக்காய் கார்போஹைட்ரேட்டின் நிறைந்த சிறந்த மூலமாகும். கர்ப்பிணி பெண்கள் இதனை எடுத்துக் கொள்வது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

வாழைப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நியூரிடிஸ் மற்றும் ஹோமோசைஸ்டீன் போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

கண், தோல் ஆரோக்கியத்திற்கு

வாழைக்காயில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது கண் ஆரோக்கியத்திற்கும், கண் பார்வை தெளிவாக தெரியவும் உதவுகிறது. மேலும் தோலின் நிறத்தை மேம்படுத்தவும் வாழைக்காய் உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் வாழைக்காயை உட்கொள்வது இவ்வாறு பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது. எனினும், கர்ப்பிணி பெண்கள் வாழைக்காயை மசித்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம். எண்ணெயில் பொறித்தோ, வறுத்தோ சேர்க்கக் கூடாது. இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எவ்வாறாயினும் கர்ப்பிணி பெண்கள் வாழைக்காயை உட்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Headaches during pregnancy: கர்ப்ப காலத்தில் காய்ச்சல் மற்றும் தலைவலி மாத்திரை சாப்பிடுவது நல்லதா?

Image Source: Freepik

Read Next

Turmeric during Pregnancy: கர்ப்ப காலத்தில் மஞ்சளை உட்கொள்வது குழந்தைக்கு ஆபத்தா? உண்மை இங்கே!

Disclaimer