கர்ப்ப காலம் பெண்களுக்கு சவால்கள் நிறைந்த காலமாகும். மகப்பேறுக்கு பிறகு அவர்கள் மறுபிறவி எடுக்கிறார்கள். குறிப்பாக இந்த நேரத்தில் பெண்கள் உடல் வலி, சோர்வு, இடுப்பு வலி, எடை அதிகரிப்பு, ஹார்மோன் மாற்றம் மற்றும் தசைப் பிடிப்புகள் போன்றவற்றை அனுபவிக்கிறார்கள்.
இதனை குறைக்க மசாஜ் செய்வது சிறந்ததாக இருக்கும். இது அவர்களின் மனதை நிம்மதியாகவும், உடல் வலியில் இருந்து விடுபடவும், நல்ல தூக்கத்தை பெறவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகளை விரிவாக காண்போம்.
முக்கிய கட்டுரைகள்

மூட்டு வலியை நீக்கும்
பொதுவாக பெண்கள் கர்ப்ப காலத்தில் மூட்டு வலிக்கு உள்ளாகின்றனர். மேலும் முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றிற்கும் ஆளாகின்றனர். இதனை போக்க மசாஜ் உதவுகிறது.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் பாதுகாப்பானவை
இரத்த ஓட்டத்தை சீராக்கும்
மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது தாய் மற்றும் குழந்தைக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. மேலும் ஊட்டச்சத்தை எளிதில் பெற உதவுகிறது.
தூக்கத்திற்கு வழிவகுக்கும்
கர்ப்ப காலத்தில் மசாஜ் செய்யும் போது பெண்களுக்கு எண்டோர்பின்கள் வெளியாகின்றன. இது நரம்பை தளர்த்தி, நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ப்படும் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, தசை பிடிப்பு மற்றும் கால் பிடிப்புகள் போன்றவற்றை நீக்க கர்ப்ப கால மசாஜ் உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் மசாஜ் செய்வதில் பல நன்மைகள் இருந்தாலும், இதனை முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக்கூடாது. இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். ஏனெனில் மசாஜ் செய்யும் போது அதிக அழுத்தம் கொடுக்க நேரிடும். ஆகையால் கர்ப்ப கால மசாஜ் செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
Image Source: Freepik