Health benefits of ear massage: நம் உடலுக்கு மசாஜ் செய்வதால் அமைதி, புத்துணர்வு மற்றும் தளர்வைப் பெறலாம். இவை உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அவ்வாறு உடலில் கால், கை, வயிறு, தலை உள்ளிட்ட ஒவ்வொரு பாகங்களையும் மசாஜ் செய்வது தனித்துவமான நன்மைகளைத் தருகிறது. ஆனால் காதுகளை மசாஜ் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிலருக்கு காதுகளை மசாஜ் செய்வது புதியதாகத் தோன்றலாம். ஆனால், உடல் மசாஜின் மூலம் பெறக்கூடிய அனைத்து நன்மைகளையும் காது மசாஜ் மூலம் பெறலாம். காதுகளுக்கு மசாஜ் செய்வதற்கு நாமே செய்யலாம்.
மூளைக்கு அருகில் உள்ள காது பகுதியை மசாஜ் செய்வதற்கு பல்வேறு பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது. நமது புலன் உறுப்புகள் அனைத்துமே ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. காதுகள் தெளிவை வழங்கக்கூடிய ஒரு கருவியாகும். மேலும் இது நாம் செயல்படத் தேவையான தகவல்களை நமக்கு வழங்குகிறது. காதுகளை மசாஜ் செய்வது முழு உடலிலும் உள்ள பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும். காதுகளை மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Strong Bones Oil: குழந்தைகளின் எலும்பை வலுவாக்க இந்த 5 எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்க
காதுகளை மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
ஆற்றலை அதிகரிக்க உதவும் மசாஜ்
காலையில் புத்துணர்ச்சியைப் பெற விரும்புபவர்கள், எழுந்த பிறகு காதுகளை தீவிரமாக தேய்க்க வேண்டும். காதில் உள்ள நரம்பு முனைகளைத் தூண்டுவது மூளை செல்களைச் செயல்படுத்தி புத்துணர்ச்சியுடன் உணர வைக்கிறது. எனவே ஆற்றல் குறைவாக இருக்கும் போது, காதுகளை மசாஜ் செய்ய முயற்சிக்க வேண்டும்.
முக்கிய கட்டுரைகள்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
காதுகளை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது அடைபட்ட நரம்புகளில் சரியான இரத்த ஓட்டத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு ஆற்றலையும் தருகிறது. இதன் மூலம் பல்வேறு நேர்மறையான விளைவுகளை ஏற்படலாம்.
சுவாச அமைப்பை சீராக்குவதற்கு
காதுகளில் உள்ள சில புள்ளிகள் ஆனது சுவாச அமைப்புடன் தொடர்புடையதாகும். காதுகளை மசாஜ் செய்வதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உணவு உடலை சரியாக சென்றடையவும் வழிவகுக்கிறது. காதுகளை மசாஜ் செய்வது பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து மனதிற்கு அமைதியைத் தருகிறது. இதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
சத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்க
சிலர் காதில் தொடர்ந்து விசில் சத்தம் அல்லது வேறெதுவும் சத்தம் கேட்பது போல உணர்வை சந்திப்பர் அல்லது குறிப்பிட்ட ஒலிகளைக் கேட்டு அதை மீண்டும் மீண்டும் தொந்தரவாக உணர்வர். இதற்கு மசாஜ் ஒரு நல்ல தீர்வாகும். கைகளால் காதில் மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் காதுகளில் விசில் சத்தத்தைக் குறைத்து கேட்கும் திறனை அதிகரிக்கிறது.
சோம்பலை போக்குவதற்கு
சோம்பலாகவோ அல்லது சோர்வாக உணரும் போது காபி குடிக்கவே பலரும் விரும்புகின்றனர். இதற்குப் பதிலாக காது மசாஜ் செய்யலாம். தினமும் காலை மற்றும் மாலையில் காதுகளை மசாஜ் செய்வதன் மூலம், சோம்பல் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகளிலிருந்து படிப்படியாக விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Foot Massge: படுக்கைக்குச் செல்லும் முன் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்வது இவ்வளவு நல்லதா?
தளர்வை அளிப்பதற்கு
காதில் உள்ள பல அக்குபிரஷர் புள்ளிகளை மசாஜ் செய்யும் போது, நேரடியாக அழுத்துவதால், அது நரம்பு மண்டலத்தில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. இது உடலில் உருவாகக் கூடிய பதட்டம் மற்றும் மன அழுத்தத்தின் மோசமான விளைவுகளைக் குறைக்கிறது. மேலும் இது மன அமைதியைத் தருகிறது.
நரம்பு மண்டலத்தை சீராக்க
காதைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்வது உடலில் நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. இது பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணத்தைத் தருகிரது. ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல்களால் 'V' வடிவத்தை உருவாக்கி, இரண்டு காதுகளுக்கு இடையில் வைக்க வேண்டும். இதை மீண்டும் மீண்டும் செய்து தேய்க்கும் போது மெதுவாக மசாஜ் செய்யலாம். இது காதைச் சுற்றியுள்ள பகுதியில் தூண்டுதலை அதிகரிக்கவும், நரம்பு தொடர்பான பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
தலைவலிக்கு நிவாரணம் அளிக்க
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள், காது மசாஜ் செய்வது நல்ல நிவாரணத்தைத் தருகிறது. எனவே தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் இரண்டு காதுகளையும் மசாஜ் செய்வதன் மூலம் நரம்புகள் தளர்ந்து தலைவலி பிரச்னை படிப்படியாக குறையும் என கூறப்படுகிறது. காதுகளை மசாஜ் செய்வது மூளையில் எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது மனதை உற்சாகப்படுத்துகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: உறங்கும் முன் உள்ளங்கால்களில் இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் என்னாகும் தெரியுமா?
Image Source: Freepik