Why you should massage your scalp thrice a week for better health: அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில பழக்க வழக்கங்களின் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இதில் ஒன்றாகவே தலையை மசாஜ் செய்வது அடங்கும். குறிப்பாக, வாரத்திற்கு மூன்று முறை தலையை மசாஜ் செய்யும் போது அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது மூளை ஆரோக்கியம், முடி ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது போன்ற பல்வேறு நன்மைகள் அடங்கும்.
இந்த எளிதான மற்றும் இயற்கையான பயிற்சியானது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அதே சமயம் மனதை அமைதிப்படுத்தவும், மயிர்க்கால்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Olive Oil for Migraines: ஒற்றைத் தலைவலி இருந்த இடம் தெரியாமல் போக இந்த ஒரு எண்ணெய் போதும்
தலையை தவறாமல் மசாஜ் செய்வது ஏன் முக்கியம்?
டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் குறிப்பிட்டுள்ள படி, வழக்கமான தலை மசாஜ் செய்வது மூளை பகுதி மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில், மசாஜ் செய்வதன் மூலம் மூளை, உச்சந்தலைக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கலாம். மேலும் இது தலைவலி ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. இவ்வாறு உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. இது கார்டிசோல் மற்றும் பிற மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கிறது.
மன அழுத்தம் நிறைந்த இந்த காலகட்டத்தில், வழக்கமான தலை மசாஜ் மன அழுத்தத்தைக் குறைக்கும் இயற்கையான கருவிகளாகச் செயல்படுகிறது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நரம்புகளைத் தளர்த்தவும் உதவுகிறது. அதே சமயம், பதட்ட உணர்வுகளைக் குறைக்கவும் உதவுகிறது. இவை மனத்தெளிவைத் தருவதுடன், உணர்ச்சி ரீதியான எழுச்சியையும் உருவாக்குகிறது.
வாரம் மூன்று முறை தலை மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- ஒவ்வொரு வாரமும் மூன்று முறை வழக்கமான தலை மசாஜ்கள் செய்வது பல நன்மைகளை வழங்குகிறது.
- தலைக்கு மசாஜ் செய்வது குறிப்பாக நரம்பு மண்டலத்தின் வழியாக மென்மையான மசாஜ் செய்வது தளர்வை ஏற்படுத்துகிறது. இது பதற்றத்தைக் குறைக்கவும், ஹார்மோன் உற்பத்தியை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
- வழக்கமான தலை மசாஜ்கள் தளர்வு மற்றும் மன அழுத்த ஹார்மோன் குறைப்பு மூலம் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
- மசாஜ் செய்யும் போது மூளை அதிக ஆக்ஸிஜனைப் பெறுவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது கவனம் செலுத்தும் திறன் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
- உச்சந்தலையில் மசாஜ் செய்வது நுண்ணறைகளைத் தூண்டுவதன் மூலம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உச்சந்தலையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், அடர்த்தியான, வலுவான முடிக்கு வழிவகுக்கிறது.
- மசாஜ் சிகிச்சையின் மூலம், இறந்த சரும செல்களை அகற்றி, உச்சந்தலையைத் தெளிவாக வைத்திருக்கலாம். இது பொடுகைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
தலையை மசாஜ் செய்வதன் மூலம் இது போன்ற பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தலை முடியை மசாஜ் செய்ய எந்த எண்ணெய் சிறந்தது? அடர்த்தியான முடிக்கு ஆயுர்வேத டிப்ஸ்!
தலையை மசாஜ் செய்வதற்கான சரியான வழி
தலையை மசாஜ் செய்வதன் அதிகபட்ச நன்மைகளைப் பெற சில அடிப்படை மசாஜ் நுட்பங்களைக் கையாள வேண்டும்.
- உச்சந்தலையில் சிறிது சூடான தேங்காய் அல்லது பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் தொடங்கலாம். சூடான எண்ணெயைப் பயன்படுத்துவது கைக்கு மென்மையான அசைவை வழங்குவதுடன், தளர்வு எதிர்வினையையும் உருவாக்குகிறது.
- உச்சந்தலையில் வட்ட இயக்கங்களில் விரல் நுனிகளை மெதுவாக நகர்த்துவதன் மூலம் மசாஜ் செயல்முறையைத் தொடங்க வேண்டும். ஏனெனில், உச்சந்தலை அதிக உணர்திறனைக் கொண்டதாகவும், மனதை தளர்வடையச் செய்யவும் உதவுகிறது.
- உச்சந்தலையில் மென்மையான, வட்ட இயக்கங்கள் கொண்டு மசாஜ் செய்வது முக்கியமாகும். உச்சந்தலையின் அடிப்பகுதியில் இருந்து தொடங்கி, அழுத்தத்தை அதிகரிக்கும் ஆனால் வலிமிகுந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
- அதே சமயம், நெற்றிப் பகுதிகள் மற்றும் மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த இடங்களிலேயே பதற்றம் பொதுவாகக் குவிகிறது.
- உகந்த தளர்வு மற்றும் சுழற்சி நன்மைகளைப் பெற, ஒரு தலை மசாஜ் அமர்வுக்கு 15-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வாரத்திற்கு மூன்று முறை இந்த முறைகளைப் பயன்படுத்தி மசாஜ் செய்வது மேம்பட்ட முடி ஆரோக்கியம் மற்றும் மன அழுத்த அளவுகளுடன் குறிப்பிடத்தக்க மன தளர்வை அடைய உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Head massage: சும்மா தளதளனு முடி நீளமா வளரணுமா? உங்க முடியை இப்படி மசாஜ் செய்யுங்க
Image Source: Freepik