Expert

Baby Massage: மசாஜ் செய்தால் குழந்தைகளின் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையுமா?

  • SHARE
  • FOLLOW
Baby Massage: மசாஜ் செய்தால் குழந்தைகளின் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையுமா?


பெரும்பாலும் புதிய பெற்றோர்களுக்கு மசாஜ் செய்யத் தெரியாததால், வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வார்கள். குழந்தை மசாஜ் செய்வதற்காகவே பல வீடுகளில் தாங்களாகவே எண்ணெய் தயாரிப்பார்கள். குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வதால் உடல் தசைகள் வலுப்பெறுவதோடு எலும்புகள் வலுவடையும் என்று மக்கள் பெரும்பாலும் நம்புகிறார்கள். இந்த கேள்வி உண்மையா? இதுகுறித்து, நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஹெச்.பி.சிங் நமக்கு விளக்கியுள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Mustard Oil Massage: குழந்தைக்கு மசாஜ் செய்ய கடுகு எண்ணெய் பயன்படுத்தலாமா?

மசாஜ் செய்தால் குழந்தைகளின் தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துமா?

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் அவர்களின் தசைகள் அல்லது எலும்புகள் வலுவடையாது. மசாஜ் செய்வதால் குழந்தைக்குத் தளர்வு ஏற்படுவதோடு நன்றாக தூங்கவும் உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தங்களின் குழந்தைகளின் மூக்கு பெரியதாகவும் கூறுமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மூக்கு எலும்பை மசாஜ் செய்யும் பல பெற்றோர்களை நான் பார்த்துள்ளேன் என மருத்துவர் கூறினார்.

ஆனால், பெற்றோர்கள் எதிர்பார்த்த முடிவு அவர்களுக்கு கிடைக்காமலும் போகலாம். ஏனென்றால், குழந்தையின் உடலின் அமைப்பு அவரது மரபணுக்களைப் பொறுத்தது, அதை மசாஜ் செய்வதன் மூலம் மாற்ற முடியாது என்பதுதான் உண்மை. குழந்தைக்கு ஆறுதல் அளிக்க மசாஜ் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம் : Baby Vomiting: உங்க குழந்தை பால் குடித்ததும் அதை வாந்தி எடுக்கிறதா? காரணம் இதுதான்!

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் நன்மைகள்

குழந்தைக்கு அதிக அழுத்தத்துடன் மசாஜ் செய்யக்கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் மெதுவாகவும் லேசாகவும் மசாஜ் செய்யுங்கள். ஏனென்றால், முதல் 3 மாதங்களில் குழந்தைகளின் எலும்புகள் மிகவும் பலவீனமாக இருக்கும். எனவே, நீங்கள் குழந்தையை அழுத்தி மசாஜ் செய்தால், அது குழந்தைக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல நேரங்களில், மசாஜ் செய்யும் போது ஏற்படும் தவறுகளால், குழந்தை எரிச்சலடைகிறது மற்றும் காரணமின்றி அழுகிறது. ஒரு குழந்தையை எப்படி மசாஜ் செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், மருத்துவர் அல்லது செவிலியரை அணுகவும்.

புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் வேகமாக வளர்ச்சியடைகிறது. எனவே மசாஜ் செய்வதால் நிவாரணம் கிடைப்பதுடன் உடலில் இரத்த ஓட்டம் மேம்படும்.

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பல நேரங்களில் குழந்தைகள் மலச்சிக்கல் பற்றி புகார் செய்கின்றனர், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மசாஜ் நிவாரணம் அளிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Diaper Hygiene Rules: குழந்தைக்கு டயப்பர் இவ்ளோ விஷயம் இருக்கா? இது நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது அவர்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் பெற்றோருக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்த உதவுகிறது. குழந்தைகளின் நல்ல ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தூக்கம் மிகவும் முக்கியமானது.

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது அவர்களின் உடலுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது, இது சரியான உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Almond Milk For Babies: இது தெரிஞ்சா இனி குழந்தைக்கு தினமும் பாதாம் பால் கொடுப்பீங்க.

Disclaimer