Best Baby Massage Oil For Strong Bones: குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மசாஜ் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது அவர்களின் எலும்புகளை வலுவடையச் செய்வது சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. அதே சமயம், மசாஜ் செய்வதற்கு சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும்.
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கென பல வகையான எண்ணெய்கள் சந்தையில் கிடைக்கிறது. ஆனால், இதில் பல்வேறு இரசாயனங்கள் மற்றும் நச்சுக்கள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவது குழந்தையின் தோலுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே குழந்தைக்கு நல்ல ஊட்டச்சத்துக்களைத் தரக்கூடிய எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இதில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய எந்த எண்ணெய் சிறந்தது என்பது குறித்து காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Diaper Hygiene Rules: குழந்தைக்கு டயப்பர் இவ்ளோ விஷயம் இருக்கா? இது நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.
குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்
கடுகு எண்ணெய்
குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய உதவும் கடுகு எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்யப்படுகிறது. இது குழந்தையின் எலும்பு மற்றும் தசைகளை பலப்படுத்த உதவுகிறது. குழந்தையின் உடலுக்கு வெப்பத்தை அளிக்கும் வகையில் கடுகு எண்ணெய் உதவுகிறது. இந்த எண்ணெயை குழந்தையின் தலையில் தடவுவது, தலைமுடி கருப்பாகவும் விரைவாகவும் வளர ஆரம்பிக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்
இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழந்தையின் உடலில் ஏற்படும் வலி மற்றும் விறைப்புத்தன்மையைப் போக்க உதவுகிறது. இது தோலுக்கும் ஊட்டமளிக்கும் சிறந்த எண்ணெய் ஆகும். தேங்காய் எண்ணெய் பயன்பாடு உடலில் எலும்புகளை வலுவடையச் செய்கிறது. இதைத் தலையில் தடவுவதன் மூலம் கூந்தல் கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கிறது.
பாதாம் எண்ணெய்
குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது மிகுந்த நன்மை பயக்கும். இந்த எண்ணெயைக் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வது அவர்களின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. தலைமுடி குறைவாக உள்ள குழந்தைகளின் தலையில் பாதாம் எண்ணெய் தடவுவது முடி விரைவாக வளர உதவுகிறது. மேலும், இது முடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும் மாற உதவுகிறது. பாதாம் எண்ணெயில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்துவதுடன், தசைகளை பலப்படுத்துகிறது. இதன் வழக்கமான மசாஜ் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ghee Benefits For Babies: குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னதெரியுமா?
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த எண்ணெயைக் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்வது குழந்தைகளின் எலும்பை வலுவடையச் செய்கிறது. இந்த எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இவை குழந்தையின் உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. தொடர்ந்து இந்த எண்ணெயைக் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வது குழந்தையின் உடலில் சரியான வளர்ச்சிக்கு உதவுகிறது.
எள் எண்ணெய்
குழந்தைக்கு எள் எண்ணெயை மசாஜ் செய்வது மிகவும் நன்மை பயக்கும். எள் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் தோலுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. எள் எண்ணெயில் வைட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த எண்ணெய் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. எள் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது நோய்த்தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது.
இந்த எண்ணெய் கொண்டு குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது மிகுந்த நன்மை பயக்கும். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குழந்தைகளுக்கு மசாஜ் செய்யலாம். ஆனால், குழந்தைகளின் சருமம் உணர்திறன் மிக்கதாக இருப்பதால் அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த சூழ்நிலையில், மருத்துவரின் ஆலோசனையின் பேரிலே எண்ணெயை மசாஜ் செய்வதற்கு பயன்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Aloe Vera For Children: குழந்தைகளுக்குக் கற்றாழை கொடுப்பதில் சிக்கல் இருக்கு! இது தெரியாம குடுக்காதீங்க
Image Source: Freepik