Thu Oct 29, 2026 | 11:48 AM IST

Expert

Milk Benefits: பால் குடிப்பதால் எலும்பு வலுவடையுமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்க!

Milk Benefits: பால் குடிப்பதால் எலும்பு வலுவடையுமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்க!Milk Benefits: பால் குடிப்பதால் எலும்பு வலுவடையுமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்க!

Is Milk Good For Your Bones: நம் அன்றாட உணவில் பால் ஒரு தவிர்க்க முடியாத பானமாக உள்ளது. பெரும்பாலும் நாம் குழந்தைகளுக்கு காலையிலும் மாலையிலும் ஒரு கிளாஸ் பால் கொடுப்பது வழக்கம். பால் குடிப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களின் எலும்பும் வலுவடையும் என்று நாம் கருதுகிறோம். பால் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெரியவர்களுக்கும் ஒரு சிறந்த பானம். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

நாம் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு செல்லும் போது எல்லாம் மருத்துவர்கள் பால் குடிக்க பரிந்துரைக்கிறார்கள் ஏன் தெரியுமா? ஏனென்றால், அதில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. பொதுவாக பால் குடித்தால் எலும்புகள் வலுவடையும் என்றும், பால் நுகர்வு உடல் எடையை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா? என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் மேக்ஸ் மருத்துவமனை (வைஷாலி) எலும்பு மற்றும் மூட்டு மாற்று இணை இயக்குநர் டாக்டர் அகிலேஷ் யாதவிடம் பேசினோம். அவர் கூறியதை இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Winter Delight: குளிர்காலத்தில் பேரிச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டால் 2 மடங்கு பலன் கிடைக்கும்!

பால் குடிப்பதால் எலும்புகள் வலுப்பெறுமா?

டாக்டர் அகிலேஷ் யாதவின் கூற்றுப்படி, பால் தொடர்பான இந்த உண்மை சரியானது. ஏனென்றால் பால் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் சிறந்த மூலம்,. இது எலும்புகளை வலுவாக வைத்திருக்கத் தேவையானது. பால் குடிப்பதால் எலும்புகள் வலுவடைவது மட்டுமின்றி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

பாலில் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் புரதம் உள்ளது. இவை, எலும்புகளை வலுவாக வைத்திருக்க தேவையான ஊட்டச்சத்துக்கள். பாலில் உள்ள புரதங்கள், குறிப்பாக கேசீன் மற்றும் மோர், தசை செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. இது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Benefits Of Fig: குளிர்காலத்தில் உடலை சூடாக வைக்க அத்திப்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் எலும்பு வலுப்பெறுமா?

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பால் குடிப்பதால் எலும்புகள் வலுவடைகின்றன, ஏனெனில் பாலில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. ஆனால், நீங்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உட்கொள்ளும் போது அல்லது டோன்ட் பால் குடிக்கும்போது, ​​​​அதில் வைட்டமின் டி இருக்காது. இது எலும்புகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

தினமும் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் பால் குடிப்பது உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது எடை இழப்புக்கு உதவுகிறது, ஏனென்றால் பால் உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி ஏற்படாது.

இந்த பதிவும் உதவலாம் : Almonds For Eyesight: உங்க கண்பார்வை பலவீனமா இருக்கா? பார்வையை மேம்படுத்த பாதாமை இப்படி சாப்பிடுங்க!

அதே நேரத்தில், இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு நோய்க்கு இது முக்கியமானதாக கருதப்படுகிறது. மனதை ரிலாக்ஸாக வைத்திருக்கவும் நினைவாற்றலை மேம்படுத்தவும் பால் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

→ Tea or Coffee: டீ அல்லது காபி… தினமும் குடிக்க எது சிறந்தது?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.