
How to keep your brain young and active with simple habits: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 அன்று உலக மூளை சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இது மூளை ஆரோக்கியம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அனைத்து வயதினரிடையேயும் மூளை செயல்பாட்டைப் பாதுகாப்பதற்கான தடுப்பு உத்திகளை ஊக்குவிப்பதற்கும் அனுசரிக்கப்படுவதாக அமைகிறது. இவை நரம்பியல் கோளாறுகளைத் தடுப்பது, அறிவாற்றல் நல்வாழ்வைப் பராமரிப்பது மற்றும் ஆரோக்கியமான மூளையை ஆதரிப்பது போன்றவை அடங்கும்.
இந்த செயல்பாடுகளுக்கு சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் கையாள வேண்டும். மூளை ஆரோக்கியத்தைப் பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வு, உற்பத்தித்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு மிகவும் முக்கியமானது என கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியம் செரிமானத்துடன் மட்டுமல்ல.. மனநிலை மற்றும் எதிர்ப்பு சக்தியுடனும் தொடர்புள்ளது..
உலக மூளை தினம் 2025
2025 ஆம் ஆண்டிற்கான உலக மூளை தினத்தின் கருப்பொருளானது, “அனைத்து வயதினருக்கும் மூளை ஆரோக்கியம்" என்பதில் கவனம் செலுத்துகிறது. உலக நரம்பியல் கூட்டமைப்பால் பல்வேறு உலகளாவிய நரம்பியல் சங்கங்களுடன் இணைந்து, உலக மூளை சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் நரம்பியல் நிலைமைகளை முன்னிலைப்படுத்துவதும், ஆரம்பகால தலையீடுகள் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும் நோக்கமாகக் கருதப்படுகிறது.
CHECK YOUR
MENTAL HEALTH

2014 ஆம் ஆண்டு உலக மூளை தினம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நரம்பியல் கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது. இந்த தினத்தில் மனநலம், அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் டிமென்ஷியா, பக்கவாதம் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் நோய்கள் குறித்த வளர்ந்து வரும் கவலையை இது எடுத்துக்காட்டுகிறது.
மூளை ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள்
ஹார்வார்டு ஹெல்த் தளத்தில் குறிப்பிட்டபடி, ஒவ்வொருவரின் வயதுக்கு ஏற்ப அவர்களின் மூளையும் மாறுகிறது. இதனுடன் மன செயல்பாடும் மாறுகிறது. இதில் மனச்சரிவு பொதுவானதாகும். மேலும், இது வயதானதால் ஏற்படும் மிகவும் அஞ்சப்படும் விளைவுகளில் ஒன்றாகும். ஆனால், அறிவாற்றல் குறைபாடு தவிர்க்க முடியாதது அல்ல. இதில் மூளை செயல்பாட்டை பராமரிக்க உதவும் பழக்கங்களைக் காணலாம்.
மனத் தூண்டுதலைப் பெறுவது
மன ரீதியாகத் தூண்டும் எந்தவொரு செயல்பாடும் மூளையை உருவாக்க உதவுகிறது. படிப்பது, வார்த்தை புதிர்கள் அல்லது கணித சிக்கல்கள் போன்ற "மன ஜிம்னாஸ்டிக்ஸ்" ஐ முயற்சிக்க வேண்டும். இதற்கு வரைதல், ஓவியம் வரைதல் மற்றும் பிற கைவினைப்பொருட்கள் போன்ற கைமுறை திறமை மற்றும் மன முயற்சி தேவைப்படும் விஷயங்களைச் செய்யலாம்.
உடல் பயிற்சி செய்வது
தசைகளைப் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உடற்பயிற்சி செய்வது புதிய நரம்பு செல்களின் வளர்ச்சியைத் தூண்டவும், மூளை செல்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் மூளைகள் மிகவும் திறமையானதாகவும், நெகிழ்வாகவும் மாறுகின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மைன்ட் டயட்! இந்த டயட்ல இருக்க ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா
சீரான உணவை மேம்படுத்துவது
நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், மீன், கொட்டைகள், நிறைவுறா எண்ணெய்கள் மற்றும் புரதங்களின் தாவர மூலங்களை எடுத்துக் கொள்வது அறிவாற்றல் குறைபாடு மற்றும் டிமென்ஷியாவை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரையை மேம்படுத்துவது
நீரிழிவு நோய் டிமென்ஷியாவுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும். இதற்கு சரியாக சாப்பிடுவது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மற்றும் மெலிதாக இருப்பது போன்றவற்றின் மூலம் நீரிழிவு நோயைத் தடுக்கலாம். ஆனால் இரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால், நல்ல கட்டுப்பாட்டை அடைய மருந்துகள் தேவைப்படுகிறது.
இரத்த அழுத்தத்தை மேம்படுத்துவது
உயர் இரத்த அழுத்தத்தால் முதுமை காலத்தில் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கலாம்.. எனவே முடிந்தவரை அழுத்தத்தை குறைவாக வைத்திருக்க வாழ்க்கை முறை மாற்றத்தைப் பயன்படுத்தலாம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மெலிதாக இருப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது போன்றவற்றைக் கையளலாம்.
கொழுப்பை மேம்படுத்துவது
அதிக அளவு கெட்ட கொழுப்பு டிமென்ஷியா அபாயத்துடன் தொடர்புடையதாகும். உடற்பயிற்சி, உணவுமுறை, எடை கட்டுப்பாடு மற்றும் புகையிலையைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் கொழுப்பின் அளவை மேம்படுத்தலாம்.
புகையிலையைத் தவிர்ப்பது
புகைபிடிப்பது மூளை ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. எனவே மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க புகையிலையைத் தவிர்க்க வேண்டும்.
குறைந்த அளவிலான ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது
சில கண்காணிப்பு ஆய்வுகளில், குறைந்த அளவிலான ஆஸ்பிரின் டிமென்ஷியாவின் அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: World brain day 2025: உடல் பருமனால் மூளை ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? எப்படினு தெரிஞ்சிக்கோங்க
Image Source: Freepik
Read Next
“நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அப்பா...”: வரதட்சணைக்கு அப்பால் - யாரும் கேட்காத ஒரு அழுகை
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version